Tuesday, June 14, 2022

ஞானத்தேடல் - Ep 44 - மருத்துவம் - 1 - (Gnanathedal)

 


காலையில் இஞ்சி 
கடும்பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய்
மண்டலம் உண்டிடில் 
விருத்தனும் பாலனாமே 


திருவள்ளுவர் மருந்து அதிகாரம்

For the people

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். 942

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943

பசித்து புசி 

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 945

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். 947

For the doctors

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 941

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 948

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

Wednesday, May 04, 2022

ஞானத்தேடல் - Ep 43 - சகுனம் - 1 - (Gnanathedal)

 

சகுனம் - 1

சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  

Sagunam (Signs/Omen) - 1

Watching for signs/omen has been a part of Tamil culture. There are a lot of literary references about these. Let's explore those in this episode

References


செந்தலை கருடன் வந்திடம் பாய்ந்தால்

கங்கையின் பொருளும் தன் கையில் கிடைக்கும்


வால்‌ நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம்‌ போனால்‌, கால்நடையாய்ப்‌ போனவர்கள்‌ கனக தண்டிகை ஏறுவாரே


போத்திடம் பாய்ந்தால் மேத்தடம் வையாதே


 'நாளும் புள்ளும் பிறவற்றினி மித்தமும்' 

- தொல்காப்பியம் 


மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்

பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ

வெம்சின விறல்வேல் காளையொடு

அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே.

- ஐங்குறுநூறு 


திண்தேர் நள்ளி கானத்து அண்டர்

பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிது – என்தோழி

பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு

விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே

- குறுந்தொகை


என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும்

நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா

துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்

அஞ்சுவரு குராஅற் குரலுந் தூற்றும்

.. 

- புறநானூறு (280)


பாக்கத்து விரிச்சி


நல்ல காரியத்திற்குப் புறப்படும்போது நல்ல வார்த்தை கேட்பது நல்ல சகுனமாகக் கருதப்பட்டது. 


இந்த நம்பிக்கை இன்றும் நிலவுவதைக் தொல்காப்பியர் இதனைப் 'பாக்கத்து விரிச்சி' எனக் குறிப்பிடுகிறார்.


படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி

- தொல்காப்பியம் 


விரிச்சி நிற்றல், வாய்ப்புள், பறவாப்புள், நற்சொல்


வேற்றுநாட்டு ஆனிரைகளை(பசுக்களை)க் கவர்ந்துவரச் செல்லும் வீரர்கள் விரிச்சி பார்ப்பார்களாம். இதற்குப் பாக்கத்து விரிச்சி என்று பெயர்


வாய்ப்புள் 


ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது சங்ககால மக்கள் கண்ணில் தோன்றும் சில காட்சிகளையும், காதில் கேட்கும் சில ஒலிகளையும் கொண்டு செயலின் பயனை முடிவு செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.


பறவாப்புள்


வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு

ஈண்டுஇருள் மாலை சொல்ஓர்த் தன்று

- புறப்பொருள் வெண்பாமாலை


நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கு

செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா

- புறநானூறு (280)


வேதின வெரிநின் ஓதி முது போத்து

ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும்

சுரனே சென்றனர் காதலர் - 

- குறுந்தொகை (140)


## நற்சொல்

பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச் (முல்லைப்பாட்டு, 7-11)

திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப (நற்றிணை 40)

புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம் (குறுந்தொகை 218)


கனவுகாணல், பல்லி சொல்லுதல், கண் துடித்தல் பற்றிய நம்பிக்கைகளையும் காண்கிறோம். 

இடக்கண் துடிப்பது பெண்களுக்கு நல்லது

தலைவனை எதிர்நோக்கும் தலைவிக்குக் கண் துடித்தால், தலைவன் விரைவில் வருவான் என நம்புகிறாள்.

நுண்ணோர் புருவத்த கண்ணுமாடு -  (ஐங்குறுநூறு)

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;  

நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே -  (கலித்தொகை)


தும்மல் 

மன்ற முதுமரத்து ஆந்தை குரலியம்பக்

குன்றகம் நண்ணிக் குறும்பிறந்து சென்றவர்

உள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்

தொள்ளிய தும்மல் வரும்

- ஐந்திணை எழுபது


பல்லி 

பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி

நல்ல கூறென நடுங்கிப்

புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே

- அகநானூறு (289)


ஞானத்தேடல் - Ep 42 - விவேக சிந்தாமணி கதைகள் - 3 (Gnanathedal)

 

விவேக சிந்தாமணி கதைகள் - 3

விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

Stories in Viveka Chithamani - 3

Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode

References

விவேக சிந்தாமணி - Viveka Chithamani


1. குரங்கு நின்று கூத்தாடிய கோலத்தைக் கண்டே

அரங்கு முன்புநாய் படிக் கொண்டாடிய அதுபோல்

கரங்கள் நீட்டியே பேசிய கசடரைக் கண்டு

சிரங்கள் ஆட்டியே மெச்சிடும் அறிவிலார் செய்கை.


2. சலந்தனில் கிடக்கும் ஆமை சலத்தை விட்டு அகன்ற போது

கொலைபுரி வேடன் கண்டு கூரையில் கொண்டு செல்ல

வலுவினால் அவனை வெல்ல வலுவொன்றும் இல்லை என்றே

கலை எலி காகம் செய்த கதை என விளம்புவாயே


3. மதியிலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கையாலே

ருதுவது காலந்தன்னில் தோடம் என்று உரைத்தே ஆற்றில்

புதுமையாய் எடுத்த போது பெட்டியில் புலி வாயாலே

அதிருடன் கடி உண்டு அன்றே அருநரகு அடைந்தான் மாதோ


4. மையது வல்லியம் வாழ் மலைகுகை தனில் புகுந்தே

ஐயமும் புலிக்குக் காட்டி அடவியில் துரத்தும் காலை

பையவே நரி கோளாலே படுபொருள் உணரப்பட்ட

வெய்ய அம் மிருகம் தானே கொன்றிட வீழ்ந்த்தன்றே.

Friday, April 15, 2022

ஞானத்தேடல் - Ep 41 - விவேக சிந்தாமணி கதைகள் - 2 (Gnanathedal)

 


விவேக சிந்தாமணி கதைகள் - 2

விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  

Stories in Viveka Chithamani - 2

Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode


References

விவேக சிந்தாமணி - Viveka Chithamani


1. கொண்டு விண்படர் கருடன் வாய்க் கொடுவரி நாகம்

விண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன்தேரை

மண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு

வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்


2. கரி ஒரு திங்கள் ஆறு கானவன் மூன்றுநாளும்

இரிதலைப் புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈதென்று

விரிதலை வேடன் கையில் வில்குதை நரம்பைக் கவ்வி

நரியனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ


3. வல்லியம் தனைக் கண்டு அஞ்சி மரம்தனில் ஏறும் வேடன்

கொல்லிய பசியைத் தீர்த்து ரட்சித்த குரங்கைக் கொன்றான்

நல்லவன் தனக்குச் செய்த நலமது மிக்கதாகும்

புல்லர்கள் தமக்குச் செய்தால் உயிர்தனைப் போக்குவாரே. 


4. கரந்தொருவன் கணை தொடுக்க மேற்பறக்கும்

      இராசாளி கருத்தும் கண்டே

உரைந்து சிறு கானகத்தில் உயிர்ப் புறா பேடு

      தனக்கு உரைக்கும் காலை

விரைந்து விடம் தீண்ட உயிர் விடும் வேடன்

      கணையால் வல்லூறும் வீழ்ந்தது

அரன் செயலே ஆவது அல்லால் தன் செயலால் 

      ஆவதுண்டோ அறிவுள் ளோரே

Friday, April 08, 2022

ஞானத்தேடல் - Ep 40 - விவேக சிந்தாமணி கதைகள் - 1 (Gnanathedal)


 விவேக சிந்தாமணி கதைகள் - 1

விவேக சிந்தாமணி என்னும் நூலில் கூறப்பட்டுள்ள கதைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stories in Viveka Chithamani - 1 Viveka Chinthamani describes a lot of stories. Let's explore those in this episode References விவேக சிந்தாமணி - Viveka Chithamani 1. வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே! 2. சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வார் புல்லர் நல்லவர் விசாரியாமல் செய்வாரோ நரிசொல் கேட்டு வல்லியம் பசுவும் கூடி மாண்டதோர் கதையைப் போலப் புல்லியர் ஒருவராலே போகுமே யாவும் நாசம் 3. புத்திமான் பலவான் வான் பலமுளான் புத்தி அற்றால் எத்தனை விதத்தினாலும் இடரது வந்தே தீரும் மற்றொரு சிங்கம் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலே. 4. கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான் பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல் முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

Saturday, April 02, 2022

ஞானத்தேடல் - Ep 39 - பிள்ளைத்தமிழ் (Gnanathedal)

 


பிள்ளைத்தமிழ் தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும். அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Pillai Tamizh In Tamil literature there is a specific types of song where a favourite God or a hero is personified as a baby and songs are sung in praise indicating the various stages of the baby's life from 3 months to 21 months. That form is called the Pillaithamizh. Let's explore that in this episode... References பன்னிரு பாட்டியல் - Panniru Paatiyal பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi ஆண்டாள் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’ - திருக்குறள். அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய். ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது. காப்பொடு செங்கீரை தால்சப் பாணி யாப்புறு முத்தம் வருகவென் றன்முத லம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர் நம்பிய மற்றவை சுற்றத் தளவென விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர் - பன்னிருபாட்டியல் சாற்றிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி மாற்றாரிய முத்தமே வாரானை - போற்றாரிய அம்புலியே யாய்த்த சிறுபறையே சிற்றிலே பம்புசிறு தேரோடும் பத்து " - வெண்பாப் பாட்டியல் பிள்ளைப் பாட்டே தெள்ளிதிற் கிளப்பின் மூன்று முதலா மூவே ழளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே.” “ஒன்று முத லையாண் டோ தினும் வரையார்'' - பன்னிருபாட்டியல் திருந்திய பெண்மக வாயின் விரும்பிய பின்னர் மூன்று மன்னுநீக் கென்றனர் பெண்பா லாயிற் பின்னர் மூன்று மன்னுதல் நீக்கினர் வாய்மொழிப் புலவர் சிற்றில் சிறுதேர் சிறுபறை யொழித்து மற்றவை மகளிர்க்கும் வைப்ப தாகும் சிற்றி லிழைத்தல் சிறுசோ றாக்கல் பொற்பமர் குழமகன் புனைமணி யூசல் யாண்டீ ராறதி லெழிற்காம னோன்பொடு வேண்டுத றானும் விளம்பினர் புலவர் பின்னைய மூன்றும் பேதையர்க் காகா ஆடுங் கழங்கு அம்மானை ஊசல் பாடுங் கவியால் பகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத் தாள் கிளையளவாம் - இலக்கண விளக்கப் பாட்டியல் ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும் • மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் • முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் • திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் • சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும். தூநிலா முற்றத்தே போந்து விளையாட வானிலா அம்புலீ சந்திரா வாவென்று நீநிலா நின்புகழா நின்ற ஆயர்தம் கோநிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி. - பெரியாழ்வார் பாசுரம் பெய்யு மாமுகில் போல்வண்ணா, உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை மையலேற்றி மயக்க உன்முகம் மாய மந்திரந்தான் கொலோ நொய்யர் பிள்ளைகள் என்பதற் குன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே. பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். ஆயினும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும், தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் பன்னிரண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பட்டுள்ளன. ஊர்ப் பெயர்களிலும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் உள்ளன. உதாரணமாக * அந்தகக்கவி வீரராகவர் செய்யூர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதியுள்ளார். * சிதம்பர முனிவர் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதியுள்ளார். * அங்கப்ப நாவலர் என்பார் பரசமய கோளரியார் பிள்ளைத்தமிழ் என்பதை எழுதினார். * வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் வாகடப் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை எழுதினார். வாகடம் என்றால் மருத்துவ நூல். * ஒரு சாதிக்கே உரிய பிள்ளைத் தமிழாக செங்குந்தர் பிள்ளைத்தமிழ் என்பது அமைந்துள்ளது. நாதன் விளையாட் டறுபத்து நாலு நடத்தும் தமிழ்மதுரை நாலா யிரத்து நானூற்று நாற்பத் தொன்ப தருட்புலவர் ஓதும் தலைச்சங் கத்தினுக்கு முயர்நா னூற்று நாற்பதுடன் ஒன்பதான தமிழ்ப்புலவ ரொழியா இடைச்சங் கத்தினுக்கும் வேத னிகர்நக் கீரர்முதல் விரிவா நாற்பத் தொன்பதுபேர் மேவும் கடைச்சங் கத்தினுக்கும் விதிசொல் குருவா மகத்தியற்கும் ஆதி குருவா மாறுகுணத் தமலா தாலோ தாலேலோ ஆல வாய்வா ழாறுமுகத் தையா தாலோ தாலேலோ. - க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ் பாடல்

Wednesday, March 23, 2022

ஞானத்தேடல் - Ep 38 - ஆணின் பருவங்கள் (Gnanathedal)

 

ஆணின் பருவங்கள்

பூவுக்கு பருவம் வகுத்தது போல மனிதர்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பருவங்கள் வகுத்தது நம் இலக்கியங்கள். மேலும் பலவகையான பாடல்களில் அவற்றை பயன்படுத்தியும் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Stages of Men In addition to classifying different stages of a flower, Tamil literature has also classified different stages for men and women. Those stages are referred in various types of songs. Let's explore that in this episode... References பன்னிரு பாட்டியல் - Panniru Paatiyal புறநானூறு - Puranaanooru ஐங்குறுநூறு - Ainkurunooru கம்பராமாயணம் - Kambaramayanam பொருநராற்றுப்படை - Porunaraatruppadai பெரும்பாணாற்றுப்படை - Perumpaanaatruppadai திருப்புகழ் - Thiruppugazh பரத சேனாபதீயம் - Bharatha Senapathiyam கந்தர் அந்தாதி - Kandhar Andhaadhi பெரியாழ்வார் திருமொழி - Periyaazhwar Thirumozhi திருப்பாணாழ்வார் பாசுரம் - Thiruppaanazhwar Pasuram பாலன்:  1 முதல் 7 வரை மீளி:  8 முதல் 10 வரை மறவோன்: 11 முதல் 14 வரை  திறவோன்: 15 வயது  காளை: 16 வயது  விடலை: 17 முதல் 30 வரை முதுமகன்: 30 வயதுக்கு மேல் காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே பாலன் யாண்டே ஏழ்என மொழிப மீளி யாண்டே பத்துஇயை காறும் மறவோன் யாண்டே பதினான் காகும் திறவோன் யாண்டே பதினைந்து ஆகும் பதினாறு எல்லை காளைக்கு யாண்டே அத்திறம் இறந்த முப்பதின் காறும் விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன் நீடிய நாற்பத் தெட்டின் அளவும் ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப - பன்னிருப் பாட்டியல் ### பாலன் வாயுள்வையகம்கண்ட மடநல்லார் ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் பாயசீருடைப் பண்புடைப்பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே - பெரியாழ்வார் திருமொழி செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச் செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே - கந்தர் அந்தாதி சே புங்கவ சங்கர பாலக தெய்வ வாவி அம்பு சே புங்கவ சங்கு அரி மருகா என சின்னம் முன்னே செப்பு உங்கு அவசம் பெறுவார் கணும் தெய்வயானைத் (தனச்) செப்பும் கவசம் புனை புயன் பாதம் என் சென்னியதே ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய், ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான், கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில் நீல மேனி யையோ நிறை கொண்டதென் நெஞ்சினையே. - திருப்பாணாழ்வார் பாசுரம் உரைதரு பாலன் பருவமு நாளுத் தரமுடனே - பரத சேனாபதீயம் குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும் பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன் குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் - திருப்புகழ் ### மீளி கருவி லோச்சிய கண்ணக னெறுழ்த்தோட் கடம்பமர் நெடுவே ளன்ன மீளி - பெரும்பாணாற்றுப்படை ஆளி நன்மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு - பொருநராற்றுப்படை ### மறவோன் நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான், ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் - கம்பராமாயணம் ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத் தீவினை தரு படை-தெறு தொழில் மறவோன் - கம்பராமாயணம் ### காளை அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே - புறநானூறு ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறநானூறு ### விடலை புதுக்கலத் தன்ன கனிய ஆலம் போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே - ஐங்குறுநூறு களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச் சுடர்தொடிக் குறுமகள் இனைய எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே - ஐங்குறுநூறு ###முதுமகன் வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் யாப்புஉடை உள்ளத்து எம்அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன் படிம உண்டியன் மழைவளம் தரூஉம் அழல்ஓம் பாளன் -மணிமேகலை நன் றாய்ந்த நீள் நிமிர்சடை முது முதல்வன் வாய் போகாது, ஒன்று புரிந்த ஈரி ரண்டின், ஆறுணர்ந்த ஒரு முதுநூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார் - புறநானூறு தொல்குடி மன்னன் மகளே; முன்நாள் கூறி வந்த மாமுது வேந்தர்க்கு - புறநானூறு * உறையூர் முதுகண்ணன் சாத்தனார் * பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி * உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்)