Thursday, May 02, 2024

ஞானத்தேடல் - Ep 139 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்.  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

தாழை, தளவம், முள் தாள் தாமரை

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங்குரலி

கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை


மௌவல்


பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்,

புன்னகையோ மௌவல் மௌவல்


மனைநடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற்றிணை


மாதரார் முறுவல்போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலித்தொகை 27


மணமௌவல் முகைஅன்ன மாவீழ் வார் நிரைவெண்பல் - கலித்தொகை 14


கொகுடி


நறுந்தண் கொகுடி - என மணத்துடன் குளிர்ச்சி உடையது


தேவார மூவரில் திருஞானசம்பந்தர் மட்டும், “புன்னையே கொகுடி முல்லை”, “கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்” எனப்பாடி யுள்ளார்.


நறும் பாதிரியு நாண்மலர்க் கொகுடியும் - பெருங்கதை

குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி - சூளாமணி


கருப்பறியலூர் / மேலைக்காழி / தலைஞாயிறு 


சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக் 

குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்

மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்

கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.


நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன் 

கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப்

பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று

வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.


நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே 

நிறைந்து தோன்றும்

காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக்

கருப்ப றியலூர்க்

கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங்

கொகுடிக் கோயில்

ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக்

கினிய வாறே.


சேடல்

நச்சினார்க்கினியர் - பவழக்கால் மல்லிகை

உ. வே. சா- பவழமல்லிகை பாரிசாதம்


சேடல் நெய்தல் பூளை மருதம்

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்

- சிலப்பதிகாரம் 


சேடல் என்பதற்கு உச்சிச்செலுந்தில் என்னும்மரம் என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.


செம்மல்

சேடல் செம்மல் - நச்சர் இதனைச் சாதிப் பூ என்றார். 


கூந்தலில் கிடந்த செம்மல் கோதை மேல் வீழ்ந்த கற்பின் - திருவிளையாடற்புராணம்.


செங்குரலி


ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி,

வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப்

- புறநானூறு 283


கோடல்


காந்தள், தோன்றி, கோடல்


கோடு - மரக்கொம்பு, வளைவு, மலை முகடு, யானைக் கொம்பு (மருப்பு), சங்கு

                     

வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் - அகநானூறு 264


வெஞ் சின அரவின் பை அணந்தன்ன

தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ

அகநானூறு 154


கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர் - அகநானூறு 23


ஊழ் உறு கோடல் போல, எல் வளை உகுபவால்  -  கலித்தொகை 48


களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,

ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் - கலித்தொகை 101


தண்கமழ்‌ கோடல்‌ துடுப்பு ஈன - திணைமொழி ஐம்பது 21


தண் நறுங் கோடல் துடுப்பு எடுப்ப, கார் எதிரி

விண் உயர் வானத்து உரும் உரற்ற, திண்ணிதின்

புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை,

கொல்லுநர் போல, வரும். ஐந்திணை எழுபது 17


கோடல் கண்ணிக் குறவர் பெருமகன் - பரிபாடல்


பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்; 

கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு;

கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து

ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே!

- திருநாவுக்கரசர்


கூடலிழைத்தல் :


இது போன்று பத்து பாசுரங்களில் ஆண்டாள் கூடலிழைத்து அரங்கன் தன்னை சேர்வாரா மாட்டாரா என பார்க்கிறார்.


தெள்ளியார்பலர் கைதொழும் தேவனார், 

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,

பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,

கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே! 


காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், 

வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமணன்,

ஒட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னொடும்

கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே! 


ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை

நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்

கூடலைக் குழற்கோதை முன் கூறிய

பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே


1 comment:

  1. Can I have Mr.R.Prabhu's mobile whatsApp contact to talk to you ? Dr.Parthiban Marimuthu 8870060162

    ReplyDelete