Thursday, March 07, 2024

ஞானத்தேடல் - Ep 131 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாழை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  வாழை 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை, பிடவம், சிறுமாரோடம்

வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்

..............


வாழை


இருகயல் உண்கண் இளையவளை வேந்தன்

தருகென்றால் தன்னையரும் நேரார் - செருவறைந்து

பாழித்தோள் வட்டித்தார் காண்பாம் இனிதல்லால்

வாழைக்காய் உப்புறைத்தல் இல்.

- பழமொழி நானூறு 338


சோலை வாழைச் சுரிநுகும்பு இனைய

அணங்குடை இருந் தலை நீவலின், மதன் அழிந்து,

மயங்கு துயர் உற்ற மையல் வேழம்

உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர,

ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும்

மா மலைநாடன் கேண்மை

காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே.

- குறுந்தொகை 308


அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்

கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்

கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,

கடுங் கண் கேழல் உழுத பூழி,

நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்  

உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை

முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்

மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,

மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி

வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,          

சாந்த விறகின் உவித்த புன்கம்

கூதளம் கவினிய குளவி முன்றில்,

செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்

ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,

நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,            

வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!

கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,

பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர், நாளும்  

ஈயா மன்னர் நாண,

வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

- புறநானூறு 168


மகளிர் கூந்தலின் மயிர்முடிப்பு வாழைப்பூவினது தோற்றம்போலப் பொலிந்து காணப்படுவதை,

வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி - சிறுபாணாற்றுப்படை


வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல்

மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் - நற்றிணை 225


பரிசிலர்க்கு வரையாது வழங்கிய வெளிமான் இறந்துபட்டான். அவன் பிரிவினை ஆற்றாது அழும் மகளிர்தம் வளைகள் வாழைப்பூப்போலச் சிதறிவிழுந்ததை,

வாழைப் பூவின் வளை முறி சிதற - புறநானூறு 237



புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை

முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்

குலைவாய் தோயும் கொழு மடல் வாழை

அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்

செம் முக மந்தி ஆரும் நாட!

- நற்றிணை 355


படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்

கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை

ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம்

மெல் விரல் மோசை போல, காந்தள்

வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப

- நற்றிணை 188


குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த                                     

ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம். 134


சிலம்பில் போகிய செம் முக வாழை

அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,

பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்

நல் வரை நாடனொடு அருவி ஆடியும்

அகநானூறு 302


தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம்,    

வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்,    

கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் 

குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம்,   

திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும்,  360

தீம் பல் தாரம் முனையின், சேம்பின்  

முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். பகற் பெயல்

- பெரும்பாணாற்றுப்படை

No comments:

Post a Comment