Saturday, February 10, 2024

ஞானத்தேடல் - Ep 127 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - 2 - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


முல்லை


புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி,

கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி  

பல் இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன் மணம் கழிந்த பின்றைக்,

- அகநானூறு 86


யாழ்இசை இனவண்டு ஆர்ப்ப, நெல்லொடு,

நாழி கொண்ட, நறுவீ முல்லை

அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது,                          

பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப 

- முல்லைப்பாட்டு

 

அகனக ரெல்லாம் அரும்பவிழ் முல்லை

நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த

மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்

கோலங் கொடியிடையார் தாங்கொள்ள மேலோர்நாள்

- சிலப்பதிகாரம்


செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,                                                 

அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,

நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,

- நெடுநல்வாடை

 

தருமணல் தாழப் பெய்து இல்பூவ லூட்டி 

எருமைப் பெடையோ டெமரீங் கயரும்

பெருமணம். (கலி: 114 : 12-14)


கற்பு முல்லை 


முல்லை சான்ற கற்பின்

மெல்லியல் குறுமகள் உறைவுஇன் ஊரே.

- அகநா


நறுமணம்  மிக்க முல்லை மலர் ஒத்த, கற்பில் சிறந்த, மென்மைத்தன்மை வாய்ந்த என் தலைவி இருக்கும் இனிய ஊர் இதுவே. – தலைவன்.


குல்லையம் புறவில் குவிமுகை அவிழ்ந்த

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்

மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்

- சிறுபாண்


கற்பு என்பது தலைவன் தலைவி இருவர்க்கும் கற்பிக்கப்பட்ட நெறி அல்லது ஒழுக்கமாகும். இதனால் அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணை யைச் சார்ந்த பாடல்கள் கற்பு என்பதற்கு விளக்கமாக அமையக் கூடியவையே ஆகும்.


அதற்கு 'கல்வி' என்ற பொருளைப் பழங்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழங்கினர்.


கற்பெனப்படுவது சொல் திறம்பாமை

நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

- கொன்றை வேந்தன்


இயல்பு வெற்றி


போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இவ்வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். 


அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை இப்பகுதியிலுள்ள துறைகள் காட்டுகின்றன. அரச முல்லை, பார்ப்பன முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறுஆண் முல்லை, வல்லஆண் முல்லை, காவல் முல்லை, பேர்ஆண் முல்லை, மற முல்லை, குடை முல்லை ஆகிய துறைகள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.


ஒரு நாட்டு வழக்குப் பாடல். 

'பச்சைத் தண்ணியிலே பல்லைக் கழுவு; முல்லைக் காற்றிலே முகத்தைக் கழுவு' - இந்த நாட்டு வழக்கு, முகத்தை முல்லை மணம் கமழும் தென்றலாலே கழுவிக் கொள்ளச் சொல்கின்றது. காற்றாலே கழுவுவதாம்.


திருமுல்லை வாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப்பாடி.


முல்லைப்பாட்டு நூல் எழுந்தது போன்று முல்லைப் பெயர் கொண்ட புலவர் பட்டியலும் உண்டு;


அள்ளூர் நன்முல்லையார்

காவல் முல்லைப் பூதனார்


தவளம் – வெண்ணிறமுல்லை

தளவம் – செம்முல்லை


முல்லை - முனைவர் வி.சி. சசிவல்லி (தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி வி.சி.சசிவல்லி).


No comments:

Post a Comment