Tuesday, February 06, 2024

ஞானத்தேடல் - Ep 125 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - முல்லை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  முல்லை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,


முல்லை


கல் இவர் = கல்லில் படரும்

கல்லில் படரும் முல்லை


முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே – தொல்காப்பியம்


முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும் – சிலப்பதிகாரம்


‘முல்லை பெரிதுகமழ் அலரி” (நற்:361:1)


'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,

நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,

கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்

புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்

முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! 

கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,

அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,

அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ;

அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யா , 

நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,

நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்

சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த

பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,

பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா! 

ஈங்கு எவன் அஞ்சுவது;

அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்

அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்

வரைப்பின் மணல் தாழப் பெய்து, திரைப்பில்

வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம், 

அல்கலும் சூழ்ந்த வினை.' 

- கலித்தொகை - 115


எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்

புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம்

கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார்

பல் ஏறு பெய்தார் தொழூஉ;

தொழுவத்து, 

சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்

கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய

ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்

கூழையுள் வீழ்ந்தன்று மன்;

அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது 

கெட்டனள், என்பவோ, யாய்;

இஃதொன்று கூறு;

கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா!

அவன் கண்ணி அன்றோ, அது;

'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் 

கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின்,

செய்வது இலாகுமோ மற்று;

எல்லாத் தவறும் அறும்;

ஓஒ! அஃது அறுமாறு;

'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின், 

நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,

நின்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம்,

அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்'

அன்னையோ,

ஆயர் மகனையும் காதலை, கைம்மிக

ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ 

நீ உற்ற நோய்க்கு மருந்து;

மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா!

வருந்துவேன் அல்லனோ, யான்;

வருந்தாதி;

மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன் 

கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா,

தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப்

பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு

ஐயன்மார் எல்லாம் ஒருங்கு. 


கலித்தொகை - 107


குமரனையும் குமரியையும் பிணைத்து மணமகன் மணமகளாக்கும் வாழ்வியற் சின்னமாகும் முல்லைப் பூ.


சீவக சிந்தாமணி

பவழம் கொள் கோடு நாட்டி பைம்பொனால் வேலி கோலி

தவழ் கதிர் முத்தம் பாய்த்தி தன் கையால் தீண்டி நல் நாள்

புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை

அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ


வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடி

கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக என குனிந்த வில் கீழ்

அம்பு அலர் கண்ணி ஆர நிதி அறைந்து ஒகை போக்கி

கம்பலம் போர்த்த போலும் கடி மலர் காவு புக்காள்


கலித்தொகை 103


கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

புல்லாளே, ஆய மகள்


அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை, 

நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து

நைவாரா ஆய மகள் தோள்


கலித்தொகை 106


ஆங்கு, 

போர் ஏற்று அருந் தலை அஞ்சலும், ஆய்ச்சியர்   40

காரிகைத் தோள் காமுறுதலும், இவ் இரண்டும்

ஓராங்குச் சேறல் இலவோ? எம் கேளே!


'கொல் ஏறு கொண்டான், இவள் கேள்வன்' என்று, ஊரார்

சொல்லும் சொல் கேளா, அளை மாறி யாம் வரும்

செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே


No comments:

Post a Comment