Wednesday, August 16, 2023

ஞானத்தேடல் - Ep101 - வேட்கைப் பத்து - Motivation - (Gnanathedal)


 வேட்கைப் பத்து


மருதம் ஓரம்போகி; நெய்தல் அம்மூவன்;

கருதும் குறிஞ்சி கபிலன்; - கருதிய

பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே;

நூலையோ தைங்குறு நூறு.


ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று.

இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார்.


"மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே" 


முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே' என்னும் இலக்கண விதியினை ஒதுக்கி


நீலமேனி வாலிழை பாகத்து

ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.


வாழி ஆதன்; வாழி அவினி!

நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!'

எனவேட் டோளே யாயே; யாமே,

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்

யாணர் ஊரன். வாழ்க!

பாணனும் வாழ்க!' என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

விளைக வயலே; வருக இரவலர்!'

எனவேட் டோளே! யாயே; யாமே,

பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்

தண்துறை யூரன் கேண்மை

வழிவழிச் சிறக்க!' எனவேட் டேமே!


வாழி ஆதன் வாழி அவினி!

பால்பல ஊறுக; பகடு பல சிறக்க!

என வேட்டோளே' யாயே; யாமே,

வித்திய உழவர் நெல்லொடு பெயரும்

பூக்கஞல் ஊரன் தன்மனை

வாழ்க்கை பொலிக' என வேட்டேமே!g


வாழி ஆதன்; வாழி அவினி!

பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!

என வேட்டோளே யாயே; யாமே,

பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்

கழனி யூரன் மார்பு

பழன மாகற்க' எனவேட் டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக!

என வேட்டோளே யாயே; யாமே

முதலைப் போத்து முழுமீன் ஆரும்

தண்துறை யூரன் தேர் எம்

முன்கடை நிற்க' என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக!

என வேட்டோளே, யாயே; யாமே,

மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்

தண்துறை யூரன் வரைக

எந்தையும் கொடுக்க' என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!'

என வேட் டோளே, யாயே; யாமே,

உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு கிருக்கும்

தன்துறை யூரன் தன்னூர்க்

கொண்டனன் செல்க' என வேட்டேமே!

 

வாழி ஆதன்; வாழி அவினி!

அரசு முறை செய்க; களவு இல்லாகுக!'

எனவேட் டோளே, யாயே; யாமே,

அலங்குசினை மா அத்து அணிமயில் இருக்கும்

பூக்கஞல் ஊரன் சூள், இவண்

வாய்ப்பதாக என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!'

என வேட் டோளே, யாயே; யாமே,

கயலார் நாரை போர்விற் சேக்கும்

தண்துறை யூரன் கேண்மை

அம்பல் ஆகற்க' என வேட் டேமே.


வாழி ஆதன்; வாழி அவினி!

மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!'

என வேட் டோளே, யாயே; யாமே,

பூத்த மாஅத்துப் புலால்அம் சிறுமீன்

தண்துறை யூரன் தன்னொடு

கொண்டனன் செல்க' என வேட்டேமே.


ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:

கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தோ சுகினோ பவந்து

சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்

 

காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதுவி சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண சந்து நிர்பயா:

பொருள்: காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.


பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.  


எல்லோரும் பஜனைகளிலும், பூஜைகளிலும் சொல்லும் சில வாழ்த்துப் பாடல்களைப் படித்து, இந்த நன்னாளில், “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” (எல்லோரும் வாழ்க! இன்பமுடன் வாழ்க) என்று நாமும் பிரார்த்தனை செய்வோம். 


வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்

கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க

நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

–கந்த புராணம் 


வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே

சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

—சம்பந்தர் தேவாரம்



மல்குக வேத வேள்வி, வழங்குக சுரந்து வானம், 

பல்குக வளங்கள் எங்கும், பரவுக வரங்கள் இன்பம் 

நல்குக உயிர்கட்கெல்லாம், நான் மறைச் சைவம் ஓங்கி, 

புல்குக உலகம் எல்லாம், புரவலன் செங்கோல் வாழ்க! 

—பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம்


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 

சேரா தியல்வது நாடு 


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!'

விளைக வயலே; வருக இரவலர்!'

பால்பல ஊறுக; பகடு பல சிறக்க!

பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!

பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக!

வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக!

அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!'

அரசு முறை செய்க; களவு இல்லாகுக!'

நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!'

மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!'

No comments:

Post a Comment