Thursday, August 31, 2023

ஞானத்தேடல் - Ep104 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஆவிரை, சூரல், பூளை - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  ஆவிரை, சூரல், பூளை


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References

குறிஞ்சிப் பாட்டு


. . . . . . . . . . . . . . . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,

பயினி, வானி, பல்லிணர்க் குரவம், 

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, 

விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,


சூரல்


வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின்

சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று,

ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்       

புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய்

இரும் பிடி இரியும் சோலைப்

பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே - அகநானூறு 228


கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த

வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த- அகநானூறு 357



குரு மயிர்க்கடுவன்

சூரல்அம் சிறுகோல் கொண்டு, வியல் அறை

மாரி மொக்குள் புடைக்கும்”

என்று ஐங்குறுநூறு (275 : 1-3) பாடுகிறது.


சூரல்–பிரம்பு 

சூரையாவது பிரம்பு என்றும் உரை காண்பர்.


தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்

மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம்

மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்

பூவைச்சேர் ஆவாரம் பூ

-அகத்தியர் குணவாகடம்


சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ

ரெல்லா மொழிக்கு மெருவகற்று – மெல்லவச

மாவாரைப் பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே

யாவாரை மூலியது.

- தேரையர் குண பாடம்


ஆவிரைக் கொன்றை நல்ல 

அழகிய , பூகம் , மத்தம் 

மேவிய மருதின் தோலும் 

விரைந்துடன் ஒக்கக் கூட்டிப் 

பூவினில் சிறந்த மாதே 

புதியதோர் தேனி லுண்ண 

காவிரி நீரும் வற்றிக் 

கடல்களும் , சுவறு , மன்றே . 

- மேகவாகடத்திரட்டு


சிறுபீளை: 


நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை 

பொரடரி ரக்த கணம் போக்குங்காண் வாரிறுக்கும் 

பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை 

யாமிது கற்பேதி யறி"


சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை 

விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே 

கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு

காட்டிற் கழன்றோடுங்காண்"


ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ


ஆவிரை

ஆவாரம்பூ 


பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த

பல்நூல் மாலை பனைபடு கலிமா”

- குறுந்தொகைப் பாடலால் (173)


பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற - கலி 138/18



சிறுபூளை


கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர

 

பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை

- அகப்பாடல்கள் (217, 297)  கூறுகின்றன.


நெடுங்குரல் பூளைப் பூவின்அன்ன, குறுந்தாள் வரகின் குறள்அவிழ்ச் சொன்றி 

- பெரும்பாணாற்றுப்படை


செந்நாய் எடுத்தலின், வளிமுனைப் பூளையின் 

ஒய்யென்று அலறிய,கெடுமான் இனநிரை

- அகப்பாடல் (199) சுட்டுகிறது. 


பூளை நீடிய வெருவரு பறந்தலை”⁠-புறநா. 23 : 20 


அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச் 

சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை

பூளை நீடிய வெருவரு பறந்தலை 20

வேளை வெண்பூக் கறிக்கும்

ஆளி லத்த மாகிய காடே.


Monday, August 28, 2023

ஞானத்தேடல் - Ep103 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - பசும்பிடி, வகுளம், காயா - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  பசும்பிடி, வகுளம், காயா


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers


References


பசும்பிடி = பச்சிலைப் பூ

பசும்பிடி -  பச்சிலைமரம்.


கரும்பார் சோலைப் பெரும்பெயர் கொல்லிப்

 பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து

- பதிற்றுப்பத்து (81)


பசும்பிடி இளமுகிழ், நெகிழ்த்த வாய் ஆம்பல்,

கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,

எருவை நறுந்தோடு, எரி இணர் வேங்கை,

உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம்,

பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்

- பரிபாடல்


பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்

- பரிபாடல் (19).


வகுளம் = மகிழம் பூ


மகிழம்பூ, இலஞ்சிப்பூ என மணம்கமழும் பெயர்கள்.


இலஞ்சி என்ற தமிழ்ச்சொல் இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயரான (Mimusops Elengi)


மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம், 

உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, 

கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும்.


மதுக்கலந் தூழ்த்துச் சிலம்பிவீழ் வனபோன்

மலர்சொரி வகுளமு மயங்கிக்


முன்னர்த் தேனைச் சொரிந்து, பின்பு காம்பு கழலுதலின் சிலம்பி வீழ்வனபோல மலரைச் சொரிகின்ற மகிழும் மயங்கி


கோடு தையாக் குழிசியோ டாரங் கொளக்கு யிற்றிய

வோடு தோ்க்கான் மலர்ந்தன வகுள முயர்சண் பகங்


குழிசியோடு ஆரம் கொளக் குயிற்றிய கோடு தையா ஓடு தேர்க்கால் வகுளம் மலர்ந்தன - குடத்துடன் ஆர்கள் அழுந்தத் தைத்து, மேற் சூட்டு வையாத, தேரின் உருளைபோல மகிழ்கள் மலர்ந்தன;


மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே “… வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்: 4).


காயாம் பூ


காடுகள் அழிந்தாலும் காயா அழியாது

காயா - காய்ப்பது இல்லை. எனவே இதனைக் 'காயா' என்றனர்.


காசாங்காடு, காசாங்குளம்‌ என் ஊர்ப்பெயர்களும் உள


திருமால் தெய்வத்தை காயாம்பூ மேனியன் என்பர்.


கருவிளை யொண்மலர்காள்  காயா மலர்காள்  திருமால் உருவொளி  காட்டுகின்றீர்  -நாச்சியார்  திருமொழி.


கருநனைக் காயாக் கணமயில் அவிழவும்,

- சிறுபாணாற்றுப்படை (165)


புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை

மென்மயில் எருத்தின்தோன்றும்”

- குறுந்தொகை (183)


பூவை -  நாகணவாய்ப் புள் (மைனா )


மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


பொன்னைப்போல் பொரு இல் மேனி,

     பூவைப் பூ வண்ணத்தான், இம்

மின்னைப்போல் இடையாளோடும் மேவும்

     மெய் உடையன் அல்லன்;

தன்னைப்போல் தகையோர் இல்லா,

     தளிரைப்போல் அடியினாளும்,

என்னைப்போல் இடையே வந்தாள்;

     இகழ்விப்பென் இவளை' என்னா,


பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;

பறவாப் பூவைப் பூவினோயே!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும்

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;


இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை

பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில்

பேதைநெஞ்சம் தென்றல் பிரமரம் ஈ ரைந்துமே

தூதுரைத்து வாங்கும் தொடை


கடலோ? மழையோ? முழு நீலக்

   கல்லோ? காயா நறும் போதோ?

படர் பூங் குவளை நாள்மலரோ?

   நீலோற்பலமோ? பானலோ?-

இடர்சேர் மடவார் உயிர் உண்பது

   யாதோ?’ என்று தளர்வாள்முன்.

மடல் சேர் தாரான் நிறம் போலும்

   அந்தி மாலை வந்ததுவே!


வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்

பொலஞ் சுழிஎன்றலும் புன்மை; பூவொடு

நிலம் சுழித்துஎழு மணி உந்தி நேர், இனி,

இலஞ்சியும்போலும் ? வேறு உவமை யாண்டுஅரோ ?


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது இலஞ்சி கிராமம்.


இலஞ்சி என்ற சொல் ஏரி, குளம், மடு, பொய்கை கோட்டைச் சுவர், மதில், மகிழமரம் எனப்பல பொருள்படும்.


இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று

     இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.


இலஞ்சி வேலவர் பிள்ளைத்தமிழ் -   கவிராச பண்டாரத்தையா. காலம் 19ம் நூற்றாண்டு.


மன்றுதொறாடல் உவந்தவர் கயிலையும்


மணிமாடக் கந்தமாதன பூதரமும் பொன் மயில்கள் மலர்க்கா விற்கார்கள்

துன்றுதொறாடல் உகந்த பரங்கிரிமலையும் தொலையாத சூரலை வாய்விடு சீரலைவாயும் தொழு திருவேரகமும்

நன்றுதொறாடலும் வந்தருள் செல்வி நயக்குந் திருஆவினன்குடியும் பழமுதிர்சோலைப் பழநாகமும் ஆகநெடும்

குன்றுதொறாடலும் வந்தருள் சேவக கொட்டுக சப்பாணி குறுமுனி பரவும் இலஞ்சிக் குருபர கொட்டுக சப்பாணி.


தெரிதமிழ் இலஞ்சிநகர் வருகுமர நாயகன்

செங்கீரை  ஆடிஅருளே


கொழிதமிழ் இலஞ்சிவரு குமரகுரு பரமுருக

கொட்டியருள் சப்பாணியே


செந்தமிழ் இலஞ்சிநகர் வந்த கந்தசுவாமி

சிறுதேர் உருட்டி அருளே

Wednesday, August 16, 2023

ஞானத்தேடல் - Ep 102 - அனுபவ ஞானம் - 6 - (Gnanathedal)


 அனுபவ ஞானம் 


கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி

  எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்

பொற்பூர உள்ளியினை விதைத்தாலும்

  அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்

சொற் போதையருக்கு அறிவுஇங்கு இனிதாக

  வருமெனவே சொல்லி னாலும்

நற்போதம் வாராது அங்கு அவர் குணமே

  மேலாக நடக்கும் தானே

வில்லது வளைந்த தென்றும் வேழமது உறங்கிற்றென்னும்

வல்லியம் பதுங்கிற் றென்னும் வளர்கடா பிந்திற்றென்னும்

புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் பெரியோர் என்று

நல்ல தென்றிருக்க வேண்டா நஞ்செனக் கருதலாமே.

தந்தை உரை தட்டினவன் தாய் உரை இகழ்ந்தோன்

அந்தமுறு தேசிகர் தம் ஆணையை மறந்தோன்

சந்தமுறு வேத நெறி தாண்டின இந்நால்வர்

செந்தழலின் வாயினிடைச் சேர்வது மெய் கண்டீர்.

ஞானத்தேடல் - Ep101 - வேட்கைப் பத்து - Motivation - (Gnanathedal)


 வேட்கைப் பத்து


மருதம் ஓரம்போகி; நெய்தல் அம்மூவன்;

கருதும் குறிஞ்சி கபிலன்; - கருதிய

பாலை ஓதலாந்தை; பனிமுல்லை பேயனே;

நூலையோ தைங்குறு நூறு.


ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று.

இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார்.


"மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே" 


முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே' என்னும் இலக்கண விதியினை ஒதுக்கி


நீலமேனி வாலிழை பாகத்து

ஒருவன் இருதாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே.


வாழி ஆதன்; வாழி அவினி!

நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!'

எனவேட் டோளே யாயே; யாமே,

நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்

யாணர் ஊரன். வாழ்க!

பாணனும் வாழ்க!' என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

விளைக வயலே; வருக இரவலர்!'

எனவேட் டோளே! யாயே; யாமே,

பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்

தண்துறை யூரன் கேண்மை

வழிவழிச் சிறக்க!' எனவேட் டேமே!


வாழி ஆதன் வாழி அவினி!

பால்பல ஊறுக; பகடு பல சிறக்க!

என வேட்டோளே' யாயே; யாமே,

வித்திய உழவர் நெல்லொடு பெயரும்

பூக்கஞல் ஊரன் தன்மனை

வாழ்க்கை பொலிக' என வேட்டேமே!g


வாழி ஆதன்; வாழி அவினி!

பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!

என வேட்டோளே யாயே; யாமே,

பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்

கழனி யூரன் மார்பு

பழன மாகற்க' எனவேட் டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக!

என வேட்டோளே யாயே; யாமே

முதலைப் போத்து முழுமீன் ஆரும்

தண்துறை யூரன் தேர் எம்

முன்கடை நிற்க' என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக!

என வேட்டோளே, யாயே; யாமே,

மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்

தண்துறை யூரன் வரைக

எந்தையும் கொடுக்க' என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!'

என வேட் டோளே, யாயே; யாமே,

உளைப்பூ மருதத்துக் கிளைக்குருகு கிருக்கும்

தன்துறை யூரன் தன்னூர்க்

கொண்டனன் செல்க' என வேட்டேமே!

 

வாழி ஆதன்; வாழி அவினி!

அரசு முறை செய்க; களவு இல்லாகுக!'

எனவேட் டோளே, யாயே; யாமே,

அலங்குசினை மா அத்து அணிமயில் இருக்கும்

பூக்கஞல் ஊரன் சூள், இவண்

வாய்ப்பதாக என வேட்டேமே!


வாழி ஆதன்; வாழி அவினி!

நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!'

என வேட் டோளே, யாயே; யாமே,

கயலார் நாரை போர்விற் சேக்கும்

தண்துறை யூரன் கேண்மை

அம்பல் ஆகற்க' என வேட் டேமே.


வாழி ஆதன்; வாழி அவினி!

மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!'

என வேட் டோளே, யாயே; யாமே,

பூத்த மாஅத்துப் புலால்அம் சிறுமீன்

தண்துறை யூரன் தன்னொடு

கொண்டனன் செல்க' என வேட்டேமே.


ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:

கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தோ சுகினோ பவந்து

சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்

 

காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதுவி சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண சந்து நிர்பயா:

பொருள்: காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.


பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.  


எல்லோரும் பஜனைகளிலும், பூஜைகளிலும் சொல்லும் சில வாழ்த்துப் பாடல்களைப் படித்து, இந்த நன்னாளில், “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” (எல்லோரும் வாழ்க! இன்பமுடன் வாழ்க) என்று நாமும் பிரார்த்தனை செய்வோம். 


வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்

கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க

நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

–கந்த புராணம் 


வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே

சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

—சம்பந்தர் தேவாரம்



மல்குக வேத வேள்வி, வழங்குக சுரந்து வானம், 

பல்குக வளங்கள் எங்கும், பரவுக வரங்கள் இன்பம் 

நல்குக உயிர்கட்கெல்லாம், நான் மறைச் சைவம் ஓங்கி, 

புல்குக உலகம் எல்லாம், புரவலன் செங்கோல் வாழ்க! 

—பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம்


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 

சேரா தியல்வது நாடு 


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


நெற்பல பொலிக; பொன் பெரிது சிறக்க!'

விளைக வயலே; வருக இரவலர்!'

பால்பல ஊறுக; பகடு பல சிறக்க!

பகைவர் புல்லார்க; பார்ப்பார் ஓதுக!

பசியில் லாகுக; பிணிசேண் நீங்குக!

வேந்து பகை தணிக; யாண்டு பல நந்துக!

அறம் நனி சிறக்க; அல்லது கெடுக!'

அரசு முறை செய்க; களவு இல்லாகுக!'

நன்று பெரிது சிறக்க; தீது இல்லாகுக!'

மாரி வாய்க்க; வளம்நனி சிறக்க!'

Ep100 - ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி

 

ஞானத்தேடல் 100 - அன்பர்களுக்கு நன்றி 


இது ஞானத்தேடலின் 100 வது பதிவு. ஆதரவளித்த அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 


குறிப்பாக பதிவுகள் அனுப்பி வாழ்த்து சொன்ன அன்பர்களுக்கு எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகள் 

- Mr. P. Soundara Rajan

- Mr. Soundararajan Kidambi

- Mr. P. Gopinath

- Dr. R. Rajesh

- Mr. R. G. Kannan

ஞானத்தேடல் - Ep99 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் -  குரவம், கோங்கம், இலவம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,


குரவம்

முருகனுக்கு உகந்த மரம்.

இது குரா, குரவு, குரவம் என்றும் சங்கநூல்களில் அழைக்கப்படுகின்றது. குராமரத்தின் பெயரால் ‘குராப்பள்ளி’ என்றொரு ஊரும் உண்டு (திருவிடைக்கழி)

இது குருந்த மரம் என்றும் கூறப்படும். இதன் நீழலில் இறைவன் குரு வடிவாக அமர்ந்திருந்து தமக்குக் காட்சி கொடுத்தருளினான் என்பர் மாணிக்கவாசகர்.


சோதியே சுடரே சூழொளி விளக்கே

சுரிகுழற் பணைமுலை மடந்தை

பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்

பங்கயத் தயனுமா லறியா

நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்

நிறைமலர்க் குருந்தமே வியசீர்

ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்

அதெந்துவே என்றரு ளாயே

திருவாசகம்-அருட்பத்து


பழநி தனில் போய் உற்பவ வினைவிள, கள்சேர் வெட்சி,

குரவு பயில் நல்தாள் பற்றுவது ...... ஒருநாளே?


சிறக்கு மாதவ முனிவரர் மகபதி

யிருக்கு வேதனு மிமையவர் பரவிய

திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்


“இணைய இவை முன்றும்‌ ஒரு முக்கூட்டு மலர்களாகின்றன (பாலை). இவை போன்று முக்கூட்டான மலர்கள்‌ புன்னையும்‌ தாழையும்‌ ஞாழலும்‌ (நெய்தல்)


34 கோங்கம்

71 இலவம்


குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் - ஐங்குறுநூறு 369)

புதுமலர்க் கோங்கம் பொன்எனத் தாது ஊழ்ப்ப - கலித்தொகை, 33:12)"


“எரி பூ இலவத்து ஊழ்கழி பன் மலர்” – ஐங் 368/1 

“எரி உரு உறழ இலவம் மலர” – கலித்தொகை 33/10

இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொருநராற்றுப்படை 27


“முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே” (நற்றிணை, 224 : 2-3)

“குரவு மலர்ந்து, அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்” (அகநானூறு, 97 : 16-17)


பாம்பின் பல் போன்று சிறியதாகவும் கூர்மையாகவும் இதன் அரும்புகள் இருக்கும். அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்– அகம் 237/3.


வேனில் கோங்கின் பூம்பொகுட்டு அன்ன குடந்தையம் செவிய கோட்டு எலி


வெள்ளி நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து ஓங்கு சினை நறுவீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/8-11


சினைப்பூங் கோங்கின் நுண்தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்து ஆங்கு - அகநானூறு 25-10


இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்,

சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் 10

பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன


“குரவம்‌ பாவை' எனப்‌ பெயர்‌ பெற்றது. பாவை மலர்‌.

‘நறுங் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை’ என்று ஐங்குறுநூறு (344 : 2-3).


முதிர்கோங்கின் முகையென பெருத்தநின் இளமுலை - கலித்தொகை

முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் - குறுந்தொகை


தான் தாயா கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப - திணை150:65/1

தான் தாயாக் கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப

ஈன்றாய் நீ பாவை இரும் குரவே ஈன்றாள்

மொழி காட்டாய்ஆயினும் முள் எயிற்றாள் சென்ற

வழி காட்டாய் ஈது என்று வந்து

கோங்கந்தான் தாயாகத் தாழ்ந்து முலை கொடுத்து வளர்ப்ப நீ பாவையினை யீன்ற இத்துணையே யாதலான், இருங்குரவே! யானீன்றாள் நினக்குச் சொல்லிய சொல்லை யெனக்குச் சொல்லா யாயினும் முள்ளெயிற்றாள் போயின வழியையாயினும் சொல்லிக்காட்டாய் வந்து இதுஎன்று.

கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின்

பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும்

பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் - பரிபாடல்

முள்ளரை இலவத்து ஒள்ளினர் வான்பூ - ஐங்குறுநூறு 320


இலை இல மலர்ந்த முகை இல் இலவம்

இலை இல மலர்ந்த இலவமொடு - அகநானூறு


இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப

முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்

தலையலர்


கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி - தேவா-சம்:318

கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே

முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் - தேவா-சம்:2781/2


அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க

அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா


அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த

அழக

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்


அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ... 


ஐங்குறுநூறு - 37. முன்னிலைப் பத்து