Saturday, July 01, 2023

ஞானத்தேடல் - Ep95 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை, கருவிளை, பயினி, வானி - (Gnanathedal)

 

குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - செருவிளை,கருவிளை, பயினி, வானி - (சிறுவானி, பவானி பெயர்க்காரணம்) 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,


செருவிளை, கருவிளை

யாப்பிலக்கணத்தில் கருவிளம் என்பது இரண்டு நிரையசைச் சீரைக் குறிப்பதாகும்.


செருவிளை என்பதற்கு ‘வெண்காக் கணம் பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவர். இவர் மணிப் பூங்கருவிளை என்பதற்கு ‘நீலமணி போலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்பர்.


‌செருவிளை

செரு = வயல்

வயலில் விளையும் மலர்


கருவிளை

வயல் அல்லாத மேட்டில் பூக்கும் மலர்


கருவிளத்தை ‘வெள்ளில்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.


இலக்கியங்களில் கருவிளை


"மணி கண்டன்ன மா நிறக் கருவிளை"

- நற்றிணைப் (221 : 1) 


"கருவிளை முரணிய தண்புதல் பகன்றை" 

- அகநானூறு (255 : 11) 


"நீலப்பைம்போது உளரி, புதல பீலி ஒண்பொறிக் கருவிளை" 

- குறுந்தொகை  (110 : 3-4) 


"காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்

நீர்வார் கண்ணின் கருவிளை மலர”

- அகநானூறு (294 : 4-5)  


"கண்ணெனக் கருவிளை மலர"

- ஐங்குறுநூறு (464 : 1) 


இதன் இலை, வேர், மற்றும் விதை முதலியவை மருத்துவக் குணம் கொண்டவை. இது சிறுநீர் பெருக்கும்; குடற்பூச்சிகளைக் கொல்லும்; வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றைக் குணப்படுத்தும் எனக் கூறப்படுகிறது


பயினி


சிறு காரோடன் பயினொடு சேர்த்திய

கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்

மறந்தனர்கொல்லோ தோழி

- அகநானூறு (356 : 9) 


"பயில்பூம் பயினி"

- பெருங்கதை  சொற்றொடரைப் பார்த்தால், பயினிமரத்தில் பூக்கள்அடர்ந்திருக்கும் என அறியலாம்.

வானி


இளஞ்சேரல் இரும்பொறை, 

"சாந்துவரு வானி நீரினும்,தீம்தண் சாயலன்" 


புனல்பாய் மகளி ராட வொழிந்த

பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்

சாந்து வருவானி நீரினும்

தீந்தண் சாயலன் மன்ற தானே


புனல்மலி பேரியா(று) இழிதந் தாங்கு

வருநர் வரையாச் செழும்பல் தாரம்

கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப


- பதிற்றுப்பத்து 

பெருங்குன்றூர் கிழார்

No comments:

Post a Comment