Sunday, May 14, 2023

ஞானத்தேடல் - Ep87- குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கூவிளம் -(Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கூவிளம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்


சிறுபாணாற்றுப்படை


ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

பாடியது.


கடை ஏழு வள்ளல்கள்


பேகன்


வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்

கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய

அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்

பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

கடாஅ யானைக் கலிமான் பேகன்

எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே

- புறநானூறு -- 141 (பரணர்)


பாரி


பாரி பாரி என்றுபல ஏத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே

 - புறநானூறு 134 (கபிலர்)


காரி


வாலுளைப் புரவியொடு வையக மருள

வீர நன்மொழி யிரவலர்க் கீந்த

வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்

கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்


ஆய் ஆண்டிரன்


இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;

பிறரும் சான்றோர் சென்ற நெறியென,

ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.

- புறநானூறு -- 134 (உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)


அஞ்சி


கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்ல 

யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த

வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே

லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது


நள்ளி


நட்டோ ருவப்ப நடைப்பரி கார 

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாட னள்ளியு நளிசினை


நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,

'வரவுஎமர் மறந்தனர்; அது நீ

புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

-  புறநானூறு 149 (வன்பரணர்)


ஓரி


நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக் 

குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த

காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

வோரிக் குதிரை யோரியு மெனவாங்

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,

சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,

உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை

உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

- புறநானூறு -- 204 (கழைதின் யானையார்)


புறநானூறு - 158

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.

பாடப்பட்டோன் : குமணன்


முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,

அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,

கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்

பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்

கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;

காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,

மாரி ஈகை, மறப்போர் மலையனும்;

ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,

கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;

ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை,

அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,

பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி

மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று

உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,

தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்,

கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு

எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்

பாடி வருநரும் பிறருங் கூடி

இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்

உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக்

கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி,

ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,

முட்புற முதுகனி பெற்ற கடுவன்

துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,

அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!

இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!\

இசைமேந் தோன்றிய வண்மையொடு,

பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!


நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி - அகம்

கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் - தேவா-சுந்:

தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் - தேவா-அப்

மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை - தேவா-சம்


யாப்பியல்

'நேர்நிரை' அசை கொண்ட சீரமைதியைக் 'கூவிளம்' என்னும் வாய்பாட்டால் வழங்குவர்.

No comments:

Post a Comment