Wednesday, May 31, 2023

ஞானத்தேடல் - Ep 91 - அனுபவ ஞானம் - 3 - (Gnanathedal)


அனுபவ ஞானம் 


கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்

விற்பன விவேகம் உள்ள வேந்தரைச் சேர்ந்தோர் வாழ்வார்

இப்புவி தன்னில் என்றும் இலவு காத்திடும் கிளிபோல்

அற்பரைச் சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகும் அம்மா.

நிலமதில் குணவான் தோன்றின் நீள் குடித்தனரும் வாழ்வார்

தல மெலாம் வாசம் தோன்றும் சந்தன மரத்திற்கு ஒப்பாம்

நலமிலாக் கயவன் தோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்

குலமெலாம் பழுது செய்யும் கோடரிக் காம்பு நேராம்

சங்கு வெண்தாமரைக்குத் தந்தை இரவி தண்ணீர்

அங்கதைக் கொய்து விட்டால் அழுகச் செய்து அந்நீர் கொல்லும்

துங்கவெண் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான்

தங்களின் நிலைமை கெட்டால் இப்படித் தயங்குவாரே

ஞானத்தேடல் - Ep90 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வாகை 


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


‌. . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்


வாகை


பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும், இதை உழிஞ்சில் என்றும் உன்ன மரம் என்றும், பாலை மரம் என்றும் கூறி வந்தனர். 


“வெற்றி வாகை சூடினான்” எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது.


‌வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம்; வட்கார் மேல் செல்வது வஞ்சி; உட்காது எதிர்ஊன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி; அது வளைத்தல் ஆகும் உழிஞை-அதிரப்பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகையாம்"


1. நிரை கவர்தல் - வெட்சி

2. நிரை மீட்டல் - கரந்தை

3. மண் கவர்தல் - வஞ்சி

4. மண் காத்தல் - காஞ்சி

5. மதில் காத்தல் - நொச்சி

6. மதில் வளைத்தல் - உழிஞை

7. போரிடல் - தும்பை

8. போரில் வெற்றி பெறுதல் - வாகை


அவை சொல்லானும் பாட்டானும் கூத்தானும் மல்லானும் சூதானும் பிறவற்றானும் வேறலாம்” -என வெற்றியைக் கொள்ளும்போர்களைக் குறித்தார். 


கல்வியிற் கேள்வியிற் கொடையிற் படையில் வெல்லுநர் அணிவது வாகை யாகும்”. -  பிங்கல நிகண்டு 


மென் பூ வாகை புன் புற கவட்டு இலை – அகம் 136/10


மெல்லிய பூவையுடைய வாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலை


வாகையின் பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும்.


மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்

குமரி வாகைக் கோலுடை நறுவீ

மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்

கான நீளிடைத் தானு நம்மொடு

ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின்

நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே.

- குறுந்தொகை - 347


அத்த வாகை அமலை வால் நெற்று,

அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக்

கோடை தூக்கும் கானம்

செல்வாம் தோழி! நல்கினர் நமரே.

- குறுந்தொகை 369

- குடவாயிற் கீரத்தனார்

வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்

மலையுடை, அருஞ் சுரம்'' என்ப நம்

முலையிடை முனிநர் சென்ற ஆறே.

- குறுந்தொகை – 39

- ஔவையார்

கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15


தார் புரிந்தன்ன வாளுடை விழவின்

போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த

கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்ப,

பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை

- பதிற்றுப்பத்து


வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை


சூடா வாகை பறந்தலை ஆடு பெற - அகம் 125/19


வாகை என்னும் ஊர் சங்ககால எயினன், நன்னன் ஆகியோர் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தனர்


புகழா வாகை பூவின் அன்ன


வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 109,110


புகழாத வாகையாகிய அகத்திப் பூவினை ஒத்த, (புகழ் வாகை – வெற்றி வாகை – வாகைத் திணை)


வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்


கருவாகை


மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,

பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்

தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற

மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்

தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,

தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,

மழை பட்டன்ன மணல் மலி பந்தர்

- அகநானூறு (136)

ஞானத்தேடல் - Ep89 - கொடுந்தமிழ் நாடு - (Gnanathedal)


 கொடுந்தமிழ் நாடு


இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

(தொல்.சொல், 397)


செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி


கொடுந்தமிழ் நாடு


கொடுந்தமிழ் என்பது வளைந்த தமிழ். இக்காலப் பேச்சு மொழியில் உள்ள வட்டார வழக்குகள் இலக்கிய மொழியிலிருந்து சிதைந்த (வளைந்த) கொடுந்தமிழ் நடையின.


"தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண், பூழி,

பன்றி. அருவா, அதன் வடக்கு. - நன்றாய

சீதம், மலாடு, புன்னாடு, செந்தமிழ்சேர்

ஏதமில் பன்னிருநாட் டெண்"


என்னும் பழைய வெண்பா எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பன்னிரண்டு நாடுகளுள் ‘மலாடு’ என்பதும் குறிக்கப் பட்டிருப்பது காண்க.


கன்னித் தென்கரைக் கடற்பழந்தீபம் கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும் எல் லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் கலிங்கம் தெலுங்கம் கொங்கணந் துளுவம் குடகங் குன்றகம் என்பன குடபால் இருபுறச் சையத்துடனுறைபு கூருந் தமிழ் திரி நிலங்களும் ' (தொல், சொல், தெய்வச்சிலையார் உரை , பக். 218 and 219)


பன்னிரு நிலமாவன- குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும், கொல்லமும் கூபகமும் சிங்களமும் சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றமுகம் கிழக்குப்பட்ட கரு நடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.


தமிழ்சூழ் பதினேழ் நிலம்


சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக்,குடகம்

கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம்,வங்கம்,

கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம்,

தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே


கொடுந்தமிழ் நாடு


தற்காலப் பெயர்


தென்பாண்டி நாடு - திருநெல்வேலிப் பகுதி

குட்ட நாடு - கேரளத்திலுள்ள கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள்

குட நாடு - வடமலபார்

கற்கா நாடு - குடகு நாடு

வேணாடு - திருவாங்கூரின் தென்பகுதி(கன்னியாகுமரி மாவட்டம்) - வேளிர் நாடு ⇒ வேள் நாடு ⇒ வேணாடு,  வேழ நாடு ⇒ வேணாடு.

பூழி நாடு - கோழிக்கோடு

பன்றி நாடு - பழனி மலை சூழ்ந்த பகுதி

அருவா நாடு -  அருவாளர் நாடு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு

அருவா வடதலை நாடு - சித்தூர், நெல்லூர்

சீத நாடு - கோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள், நீலகிரி

மலையமான் நாடு - திருக்கோவிலூர் சூழ்ந்த பகுதி

புனல் நாடு - சோழ நாடு

Sunday, May 14, 2023

ஞானத்தேடல் - Ep88 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம் - (Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு

. . . .. . . . . . . . .  வள் இதழ்

ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்

எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான் பூங் குடசம்


எறுழம்


பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்

பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்

கால் எறுழ் ஒள்வி தாஅய

முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே.

- ஐங்குறுநூறு (308)


தெறுழ்வீ


கார்பெயல் தலைஇய காண்பின் காலைக்

களிற்று முகவரியின் தெறுழ்வீ பூப்ப

- புறநா 119


வருமழைக்கு எதிரிய மணிநிற இரும்புதல்

நறைநிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ

தாஅம், தேரலர் கொல்லோ

- நற்றிணை 302 (மதுரை மருதன் இளநாகனார்)


கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந்

தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன

சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று

கூர்ந்த பசலை யவட்கு

- கார் நாற்பது 25 (மதுரைக் கண்ணங்கூத்தனார்)

இம்மலர்கள் வரகரிசியைப் பொரித்த பொரி போன்றவை


அரும்பவிழ்ந், தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன" (கார்நாற்பது, 25)


சுள்ளி


சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை

அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி

இதணால் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை

உதணால் கடிந்தான் உளன்.

- திணைமாலை நூற்றைம்பது

சுள்ளி – மராமரப் பூ; ‘சுள்ளி’ என்ற சொல் தாவரங்களைச் சுட்டும் சொல்லாக சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. ‘சுள்ளி’ என்ற சொல்லுக்கு நிகண்டுகள் அனிச்சம், நறவம், மராஅம், நாகம், ஞாழல், ஆச்சா போன்ற பல தாவரங்களைச் சுட்டுகின்றன. இச் சொல்லின் பொருள் மென்மை, கூர்மை, ஈரமற்று காய்ந்தது ஆகியவையாகும், ‘சுள்ளிவேலி’பற்றி இலக்கியமும், கல்வெட்டுகளும் கூறுகின்றன.


“வெண்பூஞ் சுள்ளி”, சுள்ளி வெண் போது சுரும்புணவிரித்து

பெருங்கதை

சுனைய நீலமுஞ் சுள்ளியுஞ் சூழ்மலர்

நனைய நாகமுங் கோங்கமு நாறிணர்ச்

சினைய சண்பகம் வேங்கையோ டேற்றுபு

முனைவன் மேற்றுதி முற்றெடுத் தோதினான்.

‌- சீவக சிந்தாமணி


கூவிரம்


கூவிரம் என்றொரு பூ வந்துள்ளது. இதற்குக் கூவிரப் பூ” என்று நச்சர் பொருள் எழுதியுள்ளார். கூவிளம் போன்று கூ' என்னும் அடைமாழி பெற்றது இது. இலக்கியப் பாடல்களில் வேறெங்கும் இப்பெயர் இல்லை. 'வீரை என்றொரு பூ உண்டு. அஃதொரு பாலை நிலத்து மரப் பூ அதன் இனத்தைச் சேர்ந்த ஒரு மரத்தின் காய் வாள் போன்று பட்டையாக நீண்டது. அதனால் அது "வாள்வீரம்’ எனப்பட்டது. அவரை வகையில் ஒரு கொடி வாள் போன்று


‌வரையன புன்னாகமும்,

கரையன சுரபுன்னையும்,

வண்டு அறைஇய சண்பக நிரை, தண் பதம்

மனைமாமரம் வாள்வீரம்,

சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,

தாய தோன்றி தீயென மலரா,

ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம்,

வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப்

பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல்

வயவர் அரி மலர்த் துறை என்கோ?

- பரிபாடல்

வடவனம்


வடவனம் என்னும் மலரைத் துளசி என அறிஞர்கள் காட்டுவதை ஏற்க இயலவில்லை. துளசியில் செந்துளசி, கருந்துளசி என இரண்டு வகை உண்டு. செந்துளசி என்னும் சொல்லிலுள்ள செம்மை செந்நிறத்தைக் குறிப்பது அன்று. செம்பொருள் என்னும் சொல்லிலுள்ள செம்மை என்பது உண்மை என்னும் பொருளை உணர்த்துவது போல உண்மையான துளசி எனப் பொருள்படுவது. வடவனம் கருந்துளசி மலரைக் குறிப்பதாகலாம்.


வடவனம் என்பது திருநீற்றுப்பச்சை என்பார் சிலர்.


ஆலமரம்

ஞானத்தேடல் - Ep87- குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கூவிளம் -(Gnanathedal)


 குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - கூவிளம்


தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்களில் அனிச்சம், குறிஞ்சி பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Flowers in Kurinji Paatu


Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about Anicham and Kurinji


References


குறிஞ்சிப் பாட்டு


ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,

செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்


சிறுபாணாற்றுப்படை


ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

பாடியது.


கடை ஏழு வள்ளல்கள்


பேகன்


வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்

கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய

அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்

பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

கடாஅ யானைக் கலிமான் பேகன்

எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே

- புறநானூறு -- 141 (பரணர்)


பாரி


பாரி பாரி என்றுபல ஏத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே

 - புறநானூறு 134 (கபிலர்)


காரி


வாலுளைப் புரவியொடு வையக மருள

வீர நன்மொழி யிரவலர்க் கீந்த

வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்

கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்


ஆய் ஆண்டிரன்


இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;

பிறரும் சான்றோர் சென்ற நெறியென,

ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.

- புறநானூறு -- 134 (உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)


அஞ்சி


கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்ல 

யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த

வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே

லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது


நள்ளி


நட்டோ ருவப்ப நடைப்பரி கார 

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாட னள்ளியு நளிசினை


நள்ளி ! வாழியோ; நள்ளி ! நள்ளென்

மாலை மருதம் பண்ணிக் காலைக்

கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,

'வரவுஎமர் மறந்தனர்; அது நீ

புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

-  புறநானூறு 149 (வன்பரணர்)


ஓரி


நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக் 

குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த

காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

வோரிக் குதிரை யோரியு மெனவாங்

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;

கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,

கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்

உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,

சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,

உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை

உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்

புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

- புறநானூறு -- 204 (கழைதின் யானையார்)


புறநானூறு - 158

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.

பாடப்பட்டோன் : குமணன்


முரசுகடிப்பு இகுப்பவும், வால்வளை துவைப்பவும்,

அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்,

கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்

பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்

கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்;

காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த,

மாரி ஈகை, மறப்போர் மலையனும்;

ஊராது ஏந்திய குதிரைக், கூர்வேல்,

கூவிளங் கண்ணிக், கொடும்பூண், எழினியும்;

ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை,

அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்,

பெருங்கல் நாடன் பேகனும்; திருந்து மொழி

மோசி பாடிய ஆயும்; ஆர்வமுற்று

உள்ளி வருநர் உலைவுநனி தீரத்,

தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்,

கொள்ளார் ஓட்டிய, நள்ளையும்; என ஆங்கு

எழுவர் மாய்ந்த பின்றை, அழி வரப்

பாடி வருநரும் பிறருங் கூடி

இரந்தோர் அற்றம் தீர்க்கென, விரைந்து இவண்

உள்ளி வந்தனென், யானே; விசும்புஉறக்

கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி,

ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,

முட்புற முதுகனி பெற்ற கடுவன்

துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,

அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!

இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண!\

இசைமேந் தோன்றிய வண்மையொடு,

பகைமேம் படுக, நீ ஏந்திய வேலே!


நெடுநெறிக் குதிரைக் கூர்வேல் அஞ்சி - அகம்

கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் - தேவா-சுந்:

தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் - தேவா-அப்

மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை - தேவா-சம்


யாப்பியல்

'நேர்நிரை' அசை கொண்ட சீரமைதியைக் 'கூவிளம்' என்னும் வாய்பாட்டால் வழங்குவர்.

ஞானத்தேடல் - Ep 86 - அனுபவ ஞானம் - 2 - (Gnanathedal)

 

அனுபவ ஞானம் 


நாய்வாலை அளவெடுத்துப் பெருக்கித் தீட்டின்

      நற்றமிழை எழுத எழுத்தாணி ஆகுமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்

      பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீட தாமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்

      சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்

ஈவாரை ஈய ஒட்டான் இவனும் ஈயான்

      எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே


கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்

     கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்

ஒரு தொழிலும் இல்லாதான் முகடியாகும்

     ஒன்றுக்கும் உதவாதான் சோம்பனாகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

     பேசாமல் இருப்பவனே பேயனாகும்

பரிவு சொலித் தழிவினவன் பசப்பனாகும்

     பசிப்பவருக்கு இட்டு உண்ணான் பாவியாமே

ஞானத்தேடல் - Ep 85 - பதார்த்த குண விளக்கம் - (Gnanathedal)


 பதார்த்த குண விளக்கம் 


தமிழ் மருத்துவம் என்பது ஒரு பெரிய கடல். பல சித்தர்கள் மனித உடலின் இயக்கம் பற்றி ஆராய்ந்து அது பற்றி நூல்களும் வைத்திய குறிப்புகளும், மூலிகைகள் குணமும், அவற்றை கொண்டு மருந்து செய்யும் முறைகளும், நெறிமுறைகளையும் தொகுத்து வழங்கி உள்ளனர். இதில் வைத்திய வித்வன்மணி சி. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் இயற்றிய பதார்த்த குண விளக்கம்  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  


Padhartha Guna Chinthamani


Siddhars have done great research about the functioning of the human body, they elaborately documented, wrote medicinal practices, herbal properties, and how to prepare medicines using those herbs. They have also explained about a healthy and hygienic lifestyle. Vaidhiya Vidhvanmani C. Kannusamy Pillai has written a text call Padhartha Guna Chinthamani. Let's explore it in this episode


References


வைத்திய வித்வன்மணி சி.  கண்ணுசாமிப்  பிள்ளை அவர்கள்


- மூல, தாது, ஜீவ வர்க்கம்

- Binomial Nomenclature


பித்தகாரி - Cholagogue

விஷநாசகாரி - Antidote

தாதுக்ஷீணரோதி - Antiseptic

பூதிகந்தநாசினி - Disinfectant

சமனகாரி - Sedative

உற்சாககாரி - Stimulant

பலகாரி - Tonic

மலகாரி - Laxative

நித்திராகாரி - Hypnotic

கபஹரகாரி - Expectorant


- தேகத்தின் உள்ளுறுப்புகளுக்கு பலம் கொடுக்கும் பதார்த்தங்கள்

- விஷமித்த பதார்த்தங்களுக்கு முறிவு


அளத்தல்


60 துளி - 1 தேக்கரண்டி (~3.5ml)

8 தேக்கரண்டி - 1 அவுன்ஸ் (~28ml-30ml)

6 அவுன்ஸ் - 1 ஆழாக்கு (~180ml)

4 ஆழாக்கு - 1 குப்பி (புட்டி) (~700ml)

8 ஆழாக்கு - 1 படி (~1.4L)

சங்கு (பாலடை) - 3/4 1 அவுன்ஸ்


நிறுத்தல்.


4 நெல் எடை - 1 குன்றிமணி

4 குன்றிமணி - 1 பண எடை (1/2 gm)

32 குன்றிமணி - 1 விராகனெடை (4gm)

40 குன்றிமணி - 1 கழஞ்சு (5gm)

10 விராகனெடை - 1 பலம் (40gm)


8 குன்றிமணி - 1 gm


வேறு.


1 ரூபாய் எடை- 1 தோலா (~13-15gm)

3 தோலா - 1 பலம் (40gm)

8 பலம் - 1 சேர் (320gm)

5 சேர் - 1 வீசை (1600gm)

8 வீசை - 1 மணங்கு (12.8kg)

ஞானத்தேடல் - Ep 84 - அனுபவ ஞானம் - 1 - (Gnanathedal)

அனுபவ ஞானம் 


ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே


மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்

காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி

கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்

ஆப்பிலா சகடுபோலே அழியுமென்று உரைக்கலாமே

 

Thursday, May 11, 2023

ஞானத்தேடல் - Ep 83 - தமிழும் அறிவியலும் - 4 (திருமூலர் - அணு) - (Gnanathedal)


 தமிழும் அறிவியலும் - 4

தமிழ் இலக்கியங்களில் இருக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  

Tamil and Science - 1

Let's see about the details found in Tamil literature about science in this episode


References

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை

அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு

அணுவில் அணுவை அணுகலும் ஆமே.


அணுவுள் அவனும் அவனுள் அணுவும்

கணுவற நின்ற கலப்ப துணரார்

இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்

தணிவற நின்றனன் சராசரந் தானே.