Monday, April 03, 2023

ஞானத்தேடல் - Ep 81 - சித்திரக்கவி - திரிபங்கி - (Gnanathedal)


 சித்திரக்கவி - திரிபங்கி 


ஆதரந் தீரன்னை போலினியாய் அம்பிகா பதியே

மாதுபங்கா வன்னிசேர் சடையாய் வம்புநீண்முடியாய்

ஏதமுய்ந் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார்

ஓதுமொன் றே!உன்னு வாரமு தேஉம்பர் நாயகனே


தாயைப் போல் இனிமை செய்பவனே! அம்பி கைக்குத் தலைவனே! உமையை இடப்பாகத்தில் உடையவளே! கையில் நெருப்பைத் தாங்கிய சடைக் கடவுளே! மணந்தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனே! குற்றத்திலிருந்து நீங்கி தின்ன ருள் பெற்று வாழ்ந்தவர்களுடைய துன்பஞ் சூழ்ந்த இருவினை களைத் தீர்க்கின்ற எம்முடைய கடவுளே! வீட்டின்பத்தையுடைய வர்கள் போற்றுகின்ற ஒப்பற்ற பொருளே! எண்ணுபவர்களுக்கு அமுதத்தைப் போன்றவனே! தேவர்களுக்குத் தலைவனே! என்னுடைய அவாவைத் தீர்ப்பாயாக!


ஆத ரந்தீர்

மாது பங்கா!

ஏத முய்ந்தார்

ஓது மொன்றே


உய்ந்தவர் போற்றும் மாதொரு பங்கன்


அன்னைபோ லினியாய்

வன்னிசேர் சடையாய்

இன்னல்சூழ் வினைதீர்

உன்னுவா ரமுதே


தாயை போல் அன்பு கொண்டவன். வன்னி மரத்தின் மலர்களை சூடுபவன். தீவினைகளையும் இடர்களையும் தீர்ப்பவன். போற்றுவார்க்கு அமுதை போன்றவன்.


அம்பிகா பதியே

வம்புநீண் முடியாய்

எம்பிரா னினியார்

உம்பர்நா யகனே


அம்பிகையின் தலைவன். நீண்ட சடைமுடி உடையவன். உயர்ந்தோரின் கடவல், தேவர்களின் தலைவன்


Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html

No comments:

Post a Comment