Saturday, January 14, 2023

ஞானத்தேடல் - Ep 67 - சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம் - (Gnanathedal)


 சித்திரக்கவி - நான்காரைச் சக்கர பந்தம்

மேரு சாபமு மேவுமே
மேவு மேயுண வாலமே
மேல வாமவ னாயமே
மேய னானடி சாருமே

மேருவை வில்லாக கொள்பவனும். ஆலகால நஞ்சை உணவாக உந்தவனும். அவன் அடியார்களிடம் விளையாடும் நண்பனும் ஆன ஈசன் திருவடிகளை வணங்குவீர்

மாதவா போதி வரதா வருளமலா
பாதமே யோத சுரரைநீ தீதகல
மாயா நெறியளிப்பா யின்றன் பகலாச்சீர்த்
தாயே யலகில்லாத தவ

போதி மரத்தடியில் ஆழ்நிலை தியானத்தில் அருள் தருவாய் இறைவா. நின் திருவடி போற்றும் அன்பர் தம்மை அசுரரென வருத்தும் தீவினை களைவாய். மனதின் இருள்நீக்கி ஞானம் அருள்வாய். தாயைப் போல் அன்பு செலுத்தும் நீ அளவிடறக்கரியவன்

No comments:

Post a Comment