Thursday, October 27, 2022

ஞானத்தேடல் - Ep 61 - வானசாஸ்திரம் - 3 - (Gnanathedal)

 

வானசாஸ்திரம் - 3


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 3


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்

சலமிகுதி துன்பந் தருக்கும் நலமில்லை

நாலுகாற் சீவனெல்லா நாசமாம் வேளாண்மை

பாலுமின்றிச் செயபுவனம் பாழ்


பிலவ ஆண்டில் மழை கொஞ்சமாக பெய்யும் அரசாள்பவர் கோபம் அதிகம் கொள்வர் கொடுமைகள் புரிவர் மக்களுக்கு நலமில்லை. கால்நடைகள் பெருத்த அளவில் மடியும். விவசாயம் பொய்க்கும். பாலும் உணவும் இன்றி உலகம் பாழாகும்


சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்

அவமாம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்

நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்

கேடெங்கு மில்லையதிற் கேள்


சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே பொருட்கள் வீணாகி அந்நாடு பாழாகும். மணப்பண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை இவ்வாண்டில்


சோப கிருதுதன்னிற்  றொல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ் சோபனங்கள்

உண்டாகு மாரி யொழியாமற் பெய்யும்மெல்லாம்

உண்டாகு மென்றே யுரை


சோபகிருது ஆண்டில் உலகில் எல்லாம் செழிப்பாக இருக்கும். மக்களிடையே கோபகுணம் அகன்று நல்ல எண்ணங்கள் பெருகும். நற்செயல்கள் பெருகும் மழை நன்றாக பெய்யும் எல்லா வித்துக்களும் விளையும் நன்மைகள் உண்டாகும்.


கோரக் குரோதிதனிற் கொல்லைமிகுங் கள்ளரினாற்

பாரிற் சனங்கள் பயமடைவார் கார்மிக்க

அற்ப மழைபெய்யு மஃகம் குறையுமே

சொர்ப்பவிளை உண்டெனவே சொல்


குரோதி வருடம் கோரம் மிகுந்ததாக இருக்கும். கொலைகள் அதிகமாக நடக்கும். திருடர்களினால் மக்கள் மிகுந்த அச்சம் கொள்வர். மழை குறைவாக பெய்யும் யாகங்கள் குறையும். விளைச்சல் குன்றும்


இடைக்காடர் 60 வருட பலன்கள்


https://www.mediafire.com/file/st1eqzeoq45cxf9/Edaikaadar-60-Varuda-Palangal.pdf/file

ஞானத்தேடல் - Ep 60 - சித்திரக்கவி - ஏகநாகபந்தம் - (Gnanathedal)



சித்திரக்கவி - ஏகநாகபந்தம்


வந்தறந் தோய்ந்தி வையமுயத் தந்தநம் வாமிசுதன் 

தந்திரஞ்சேர் மதமார்வார் முன் சாய்ந்தவபோதனுசன் 

சந்ததம் சீர்த்திவதிதுதி மாதவர் தந்தன்புசெய் செந்தில் 

வந்தந்த நந்தந்தமிழார் நஞ்சிதசிவ


இவ்வுலக முக்திக்காக, முருகப் பெருமான் அனைத்து உன்னத குணங்களுடனும் வந்தார். தீய எண்ணம் கொண்டவர்கள் அவர் காலில் விழுவார்கள். இவரை வழிபடும் பக்தர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். தமிழ் மக்களாகிய நமக்கு அவரைப் பிறப்பித்த சிவபெருமானைப் போற்றுகிறோம்


என்ராமச் சந்திரன் இன்ப மலிசத்தி 

என்னவே தன்பேர்சீர் மன்னவே - வன்புவியிற் 

பல்லூழி வாழிகவி யேற்றல்மா வாணியவள் 

நல்கல்பூ வாகையருள் நன்கு.


என் ராமச்சந்திரன் என்றும் இன்பமிக்க செல்லப் பெயர் சத்தி யென்றும் யாவரும் கூறக்கூடிய தனது பேரும் புகழும் நிலைபெற, வலிமையான பூமியின் கண்ணே கவிகளையேற்றலால், இலக்குமி யும் சரசுவதியும் அழகிய வெற்றிமாலையும் நன்றாகக் கொடுக்க அருள் தங்கித் தலைவன் பல்லூழி வாழ்க,


Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html


Sunday, October 16, 2022

ஞானத்தேடல் - Ep 59 - வான சாஸ்திரம் - 2 - (Gnanathedal)

 

வான சாஸ்திரம் - 2


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 2


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


புறநானூறு


பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் (13),


வான்றோய் வன்ன புரிசை விசும்பின்

மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற் (21)


மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல (25)


முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்,

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் (60)


மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்

தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் (117)


வடமீன் புரையுங் கற்பின் மடமொழி (122)


வானம் மீன்பல பூப்பின், ஆனாது (125)


பன்மீன் இமைக்கும் மாக விசும்பின் (270)


மாரி வானத்து மீன் நாப்பண் (396)


பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

பாடியவர்: கூடலூர்கிழார்



ஆடிய லழற்குட்டத்

தாரிரு ளரையிரவின்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக்குளத்துக் கயங்காய்ப்

பங்குனியுய ரழுவத்துத் 


தலைநாண்மீ னிலைதிரிய

நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்

தொன்னாண்மீன் றுறைபடியப்

பாசிச் செல்லா தூசி முன்னா

தளக்கர்த்திணை விளக்காகக்


கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி

ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே

அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்

பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்

நோயில னாயி னன்றுமற் றில்லென


அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப

அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே

மைந்துடை யானை கைவைத் துறங்கவும்

திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்

காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்


காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்

மேலோ ருலக மெய்தின னாகலின்

ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்

தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்


களந்து கொடை யறியா வீகை

மணிவரை யன்ன மாஅ யோனே.


ஞானத்தேடல் - Ep 58 - சித்திரக்கவி - காதைகரப்பு - (Gnanathedal)

 

சித்திரக்கவி - காதைகரப்பு


தாயேயா நோவவா வீரு வெமதுநீ

பின்னை  வெருவா வருவதொ ரத்தப

வெம்புகல் வேறிருத்தி  வைத்த சினிச் சைகவர்

தாவா வருங்கலநீ யே


எங்கள் தாயாக இருக்கும் இறைவா. எங்கள் துயர் தீர். நீ எங்கள் சார்பாக பாதுகாவலாக உள்ளாய், இருப்பினும் அச்சமாகவும் தோன்றுகிறாய். அந்த அச்சமும் மறைந்து பின்னர் புகலிடம் அளித்து அமைதி தருவாய். எங்களுக்கு கேடில்லாத பாதுகாப்பு அரனாய் இருக்கிறாய் ஈசனே.  


கருவார் கச்சித்

திருவே கம்பத்

தொருவா வென்நீ 

மருவா நோயே


மனதில் கச்சித் திருவேகம்பத்துறையும் கச்சியப்பரை நினைத்தால் மீண்டும் கருவில் புகுந்து பிறப்பெடுக்கும் நோய் நம்மை சேராது.


Monday, October 03, 2022

ஞானத்தேடல் - Ep 57 - வான சாஸ்திரம் - 1 - (Gnanathedal)

 

வான சாஸ்திரம் - 1


வான சாஸ்திரம்  பற்றி தமிழர்களும் தமிழ் இலக்கியங்களும் விட்டு சென்ற அரிய செய்திகள் மற்றும் குறிப்புகள் பற்றி இந்த  பதிவில் பார்ப்போம்...  


Astronomy - 1


Let's see what the ancients knew about astronomy and what have they recorded in the literature in this episode


References


நட்சத்திரங்கள்


- விடிவெள்ளி -Venus

- ஆமைவெள்ளி - Orion's Belt

- கூட்டுவெள்ளி - Pleiades cluster

- கட்டில்கால் - Orion Constellation

- செட்டிக் குடிகெடுத்தான்

- கார்த்திகை நட்சத்திரம் - Pleiades cluster

- திருவாதிரை - Betelgeuse


ஆண்டாள் பாசுரம்


புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

      கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

      வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

      குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன்னாளால்

      கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்

ஞானத்தேடல் - Ep 56 - கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - (Gnanathedal)

 

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற வாக்கிற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பற்றி ஓர் உண்மை கதையை இந்த  பதிவில் பார்ப்போம்...  


The Noble are always Noble even in adversity


Let's see about an interesting true story where a man who lived up to the old saying "The noble are always noble even in adversity", in this episode


References


அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.


மிதலைப்பட்டி - அது சிவகங்கை ஸம்ஸ்தானத்தைச்‌ சார்ந்தது.


மணிமேகலையை அவள்‌ அணிந்துகொள்ளும்‌ வண்ணம்‌ செப்பஞ்‌ செய்துகொடுத்ததும்‌ மிதிலைப்பட்டிப்‌ பிரதியே!


அழகிய சிற்றம்பலக்‌ கவிராயர்‌  


பல அரிய தமிழ்ச்‌ சுவடிகள்‌ பலநாற்றாண்டுகளாகச்‌ சேகரித்து அவர்‌ வீட்டிலே பாதுகாக்கப்‌ பெற்றிருந்தன


தாரமங்கலம்‌ கோயில்‌  திருப்பணிகள்‌ செய்த கட்டியப்ப முதலியார்‌

வெங்‌களப்ப நாயக்கர் 

இராமநாதபுரம்‌ சேதுபதிகள்  

மருங்காபுரி ஜமீன்‌தார்