Thursday, August 18, 2022

ஞானத்தேடல் - Ep50 - நோய் தீர்க்கும் பாடல்கள் - 1 - (Gnanathedal)

 


நோய் தீர்க்கும் பாடல்கள் - 1

ஒருவர் நோய்வாய்ப் படும்போது இறை நம்பிக்கை தோன்றும். அப்படி பெரியாழ்வார் ஒரு முறை நோய்வாய் பட்டபோது இந்த பாசுரங்களை பாடினார். இதை பாராயணம் செய்யும் பக்தர்கள் நோய் குறைகிறது என்பது நம்பிக்கை அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Songs that cure illness - 1 When one gets sick, they turn to God for getting their illness cured. Likewise, Periazhwar got sick and sang 10 Pasurams to get cured. It is believed that those who sing these pasurams get their illness cured. Let's explore about it in this episode References 1. நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும் கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின் மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2) 2. சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக்கோன் பொறிஒற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடிஒளித்தார் முத்துத் திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் பத்தர்க்கு அமுதன்அடியேன் பண்டுஅன்றுபட்டினம்காப்பே. 3. வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து என்னைப் பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே. 4. மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 5. மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர். பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 6 உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள். உமக்குஇங்குஓர் பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே. 7. கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே. 8. ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து போதில்கமலவன்னெஞ்சம் புகுந்தும்என்சென்னித்திடரில் பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே. 9 உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே. அறவெறிநாந்தகவாளே. அழகியசார்ங்கமே. தண்டே. இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள். பறவையரையா. உறகல் பள்ளியறைக்குறிக்கோண்மின். 10 அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே.

No comments:

Post a Comment