18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy)
18ம் நூற்றாண்டில் தனிமை பாதுகாப்பு (Privacy) பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்...
Awareness of Privacy in the 18th century Tamil Literature Let's explore about the awareness of Privacy in the 18th century Tamil Literature in this episode References அறப்பளீசுர சதகம் சென்மித்த வருடமு முண்டான வத்தமுந் தீதில் கிரகச் சார முந் தின்றுவரு மௌடதமு மேலான தேசிகன் செப்பிய மகா மந்த்ரமும் புன்மையவ மானமுந் தானமும் பைம்பொனணி புனையுமட வார் கலவியும் புகழ்மேவு மானமு மிவையொன்ப துந்தமது புந்திக்கு ளேவைப் பதே தன்மமென் றுரைசெய்யவ ரொன்னார் கருத்தையுந் தன்பிணி யையும் பசியையுந் தான்செய்த பாவமு மிவையெலாம் வேறொருவர் தஞ்செவியில் வைப்ப தியல்பாம் அன்மருவு கண்டனே மூன்றுலகு மீன் றவுமை அன்பனே யருமை மதவே ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள ரறப்பளீ சுர தேவனே. (39) சொல்லக்கூடாதது - பிறந்த வருடம் - செல்வம் - ஜாதகம் - உண்ணும் மருந்து - குரு உபதேசித்த மந்திரமும் - அவமானம் - தானம் - பெண்களிடம் இருக்கும் காதல் நெருக்கம் - புகழ் தரும் மானம் சொல்ல வேண்டியது - எதிரிகள் கருத்து - தன் பிணி பசி - தான் செய்த பாவம்