Wednesday, May 04, 2022

ஞானத்தேடல் - Ep 43 - சகுனம் - 1 - (Gnanathedal)

 

சகுனம் - 1

சகுனம் அல்லது நிமித்தம் தமிழர் வாழ்வில் கலந்த ஒன்று அவற்றை பற்றி இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பது  பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...  

Sagunam (Signs/Omen) - 1

Watching for signs/omen has been a part of Tamil culture. There are a lot of literary references about these. Let's explore those in this episode

References


செந்தலை கருடன் வந்திடம் பாய்ந்தால்

கங்கையின் பொருளும் தன் கையில் கிடைக்கும்


வால்‌ நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடம்‌ போனால்‌, கால்நடையாய்ப்‌ போனவர்கள்‌ கனக தண்டிகை ஏறுவாரே


போத்திடம் பாய்ந்தால் மேத்தடம் வையாதே


 'நாளும் புள்ளும் பிறவற்றினி மித்தமும்' 

- தொல்காப்பியம் 


மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை

அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்

பச்சூன் பெய்த பைந்நிண வல்சி

பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ

வெம்சின விறல்வேல் காளையொடு

அம்சில் ஓதியை வரக்கரைந் தீமே.

- ஐங்குறுநூறு 


திண்தேர் நள்ளி கானத்து அண்டர்

பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி

முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு

எழுகலத்து ஏந்தினும் சிறிது – என்தோழி

பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு

விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே

- குறுந்தொகை


என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும்

நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா

துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்

அஞ்சுவரு குராஅற் குரலுந் தூற்றும்

.. 

- புறநானூறு (280)


பாக்கத்து விரிச்சி


நல்ல காரியத்திற்குப் புறப்படும்போது நல்ல வார்த்தை கேட்பது நல்ல சகுனமாகக் கருதப்பட்டது. 


இந்த நம்பிக்கை இன்றும் நிலவுவதைக் தொல்காப்பியர் இதனைப் 'பாக்கத்து விரிச்சி' எனக் குறிப்பிடுகிறார்.


படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி

- தொல்காப்பியம் 


விரிச்சி நிற்றல், வாய்ப்புள், பறவாப்புள், நற்சொல்


வேற்றுநாட்டு ஆனிரைகளை(பசுக்களை)க் கவர்ந்துவரச் செல்லும் வீரர்கள் விரிச்சி பார்ப்பார்களாம். இதற்குப் பாக்கத்து விரிச்சி என்று பெயர்


வாய்ப்புள் 


ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது சங்ககால மக்கள் கண்ணில் தோன்றும் சில காட்சிகளையும், காதில் கேட்கும் சில ஒலிகளையும் கொண்டு செயலின் பயனை முடிவு செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.


பறவாப்புள்


வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு

ஈண்டுஇருள் மாலை சொல்ஓர்த் தன்று

- புறப்பொருள் வெண்பாமாலை


நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கு

செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா

- புறநானூறு (280)


வேதின வெரிநின் ஓதி முது போத்து

ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும்

சுரனே சென்றனர் காதலர் - 

- குறுந்தொகை (140)


## நற்சொல்

பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச் (முல்லைப்பாட்டு, 7-11)

திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப (நற்றிணை 40)

புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம் (குறுந்தொகை 218)


கனவுகாணல், பல்லி சொல்லுதல், கண் துடித்தல் பற்றிய நம்பிக்கைகளையும் காண்கிறோம். 

இடக்கண் துடிப்பது பெண்களுக்கு நல்லது

தலைவனை எதிர்நோக்கும் தலைவிக்குக் கண் துடித்தால், தலைவன் விரைவில் வருவான் என நம்புகிறாள்.

நுண்ணோர் புருவத்த கண்ணுமாடு -  (ஐங்குறுநூறு)

பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;  

நல் எழில் உண்கணும் ஆடுமால், இடனே -  (கலித்தொகை)


தும்மல் 

மன்ற முதுமரத்து ஆந்தை குரலியம்பக்

குன்றகம் நண்ணிக் குறும்பிறந்து சென்றவர்

உள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்

தொள்ளிய தும்மல் வரும்

- ஐந்திணை எழுபது


பல்லி 

பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி

நல்ல கூறென நடுங்கிப்

புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே

- அகநானூறு (289)


No comments:

Post a Comment