சித்திர கவி - கோமூத்திரி பந்தம்
சித்திர கவி வகைகளுள் ஒன்றான கோமூத்திரி பந்தம் பற்றிய செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்...
Chithira Kavi - Komoothri Bandham
Let's see about an interesting form of poetry called Komoothri Bandham that comes under the category of Chithirakavi in this episode
References
தண்டியலங்காரம் - Thandialangaaram
பருவ மாகவி தோகன மாலையே
பொருவி லாவுழை மேவன கானமே
மருவு மாசைவி டாகன மாலையே
வெருவி லாயிழை பூவணி காலமே
தலைவியே ! தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம்
இதுதான். எல்லாத் திசைகளிலும் மேகங்கள் காணப் பெறுகின்றன.
மாலைப் பொழுதில் இம்மேகங்கள் தொடர்ந்து மழையைத் தந்து
கொண்டே இருக்கப் போகின்றன. காட்டிலே மான்கள்
இக்காலத்தின் வருகையால் மகிழ்ந்து விளையாடுகின்றன. உயர்ந்த
அணிகலன்களை அணிந்தவளே ! தலைவன் மலர்களால்
உன்னை அழகு செய்ய வரப்போகிறான் கலங்காதே” எனத்
தோழி கூறுவதாக இப்பாடலின் பொருள் அமைகிறது.
Komoothri Bandham image - https://i.imgur.com/hBBuHcw.png
Also see - https://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html