Wednesday, July 20, 2022

ஞானத்தேடல் - Ep 47 - வறுமை நீங்க - (Gnanathedal)

 

வறுமை நீங்க வறுமை பற்றி இலக்கியங்கள் கூறுவது மற்றும் அது நீங்க வழி பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை இந்த பதிவில் பார்ப்போம்... Poverty Let's explore about what Tamil literature says about poverty and the means to get out of it in this episode References கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிதே இளமையில் வறுமை அதனினுங் கொடிதே ஆற்றொணாக் கொடுநோய் அதனினுங் கொடிதே அன்பில்லாப் பெண்டிர் அதனினுங் கொடிதே இன்புற அவள் கையில் உண்பது தானே! - ஔவையார் தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும் வேங்கை போல் வீரம் குன்றும் விருந்தினர் காண நாணும் பூங்கொடி மனையாட்கு அஞ்சும் புல்லருக்கு இணங்கச் செய்யும் ஓங்கிய அறிவு குன்றும் உலகெலாம் பழிக்கும் தானே - விவேக சிந்தாமணி மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம் - ஔவையார் நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே வாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய ...... மொழியேனே கந்தர் அநுபூதி 19 (வறுமையை நீக்கி அருள்வாய்) வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோ கியவா அடி அந்தம் இலா அயில் வேல் அரசே மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில் குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச் சுகமருளல் வேண்டும்; அன்புடன் நின்புகழ் பாடிக்குறித்து நின் ஆணை வழி நடப்பேன்; ஆண்டே-ஆணைவழி நடப்பேன்


ஞானத்தேடல் - Ep 46 - விரதம் - (Gnanathedal)

 

விரதம் விரதம் - உண்ணா நோன்பு பற்றி தமிழ் இலக்கியத்தில் உள்ள செய்திகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Fasting Let's explore about fasting and its references in Tamil culture and literature in this episode References வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய் வண்ணம்கண்டு நான்உம்மை வணங்கிஅன்றிப் போகேன்என் றெண்ணம் முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே அன்னிமிஞிலி பாசிலை அமனற் பயறு ஆ புக்கென வாய்மொழிக் கோசர் நவைத்த சிறுமையின் கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் சினத்தின் கொண்ட படிவம் மாறாள் மறம் கெழு தானைக் கொள்ள குறும்பியன் செரு இயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர் இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னி மிஞிலி போல மெய்ம்மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம் - ( அகம் குறிஞ்சி பரணர் 262) வடக்கிருத்தல் 1. கோப்பெருஞ்சோழன் இறந்தபோது வடக்கிருத்தல் என்னும் நோன்பை பின்பற்றி பிசிராந்தையார் விரதமிருந்து உயிர் துறந்தார். பொத்தியார் 2. கபிலர் - பாரி இறந்ததை எண்ணி துக்கம் தாழாமல் வடக்கிருந்தார் 3. ### வெண்ணிப் பறந்தலை கரிகால் வளவன் | சேரலாதன் கழாத்தலையார் - புறம் 65 மாமூலனார் - அகம் 55 வெண்ணிக் குயத்தியார் - புறம் 66 கரிகால் வளவனோடு வெண்ணிப் புறந்தலை பொருது புண்நாணிய சேரலாதன் வலி அழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் நலிபு அழிந்தார் நாட்டு அறைபோய் நைந்தார் மெலிவு ஒழிய இன்னவரால் என்னாராய் ஈந்த ஒரு துற்று மன்னவராச் செய்யும் மதித்து. - சிறுபஞ்சமூலம் 71 குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே.


Monday, July 11, 2022

ஞானத்தேடல் - Ep 45 - தமிழின் மேன்மை - (Gnanathedal)

 


தமிழின் மேன்மை தமிழ் மொழியின் மேன்மை பற்றி சில நிகழ்வுகள் மூலம் இந்த பதிவில் பார்ப்போம்... Tamil's Greatness Let's explore Tamil's greatness with a few example incidents in this episode References திட்டினால் கூட தமிழில் திட்டு மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம் போல் கைதான் இருபது உடையான் தலைப்பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. - கந்தரலங்காரம் வைகை நதி நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று வாரியிடம் புகுதா வைகையே – மாறி இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு. - புகழேந்திப் புலவர் வைகை நதிப்புனலால் வாதநீர் குஷ்டமொடுமெய்ச் செய்கை தவிர்க்குஞ்சோபை திண்கரப்பான் - மெய்யெரிவு தாக நடுக்கனிலந் தாதுநஷ்டஞ் சிலவிடமும் ஏகுமிந்த வையம் விடுத்தே. - தேரையர் ராமாயணம் தீவைத்தான் தீவைத்தான்